OUR CLIENTS
ஆந்திராவில் 2 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு!
ஆந்திராவில் 2 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு! Posted on 13-Nov-2018 ஆந்திராவில் 2 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு!

அமராவதி, நவ.13-

ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு  தனது அமைச்சரவையை விரிவுபடுத்தினார். தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 2 பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றனர். 
ஆந்திர மாநிலத்தின் ஆளும் கட்சியான தெலுங்கு தேசம், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியது. அதனை தொடர்ந்து, மாநில ஆட்சியில் கூட்டணி வகித்து வந்த பா.ஜ.க. கூட்டணியை விட்டு வெளியேறியது.
இதன் காரணமாக முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் அமைச்சரவையில் பதவி வகித்து வந்த பா.ஜ.க. அமைச்சர்கள் 2 பேர் கடந்த மார்ச் மாதம் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது அமைச்சரவையை விரிவுபடுத்தினார். தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 2 பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றனர். அவர்கள் தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பரூக் மற்றும் கிடாரி ஷ்ரவன் குமார் ஆவார்கள். அவர்கள் இருவருக்கும் கவர்னர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்துவைத்தார். பரூக், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனர் என்.டி. ராமாராவ் மற்றும் தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகிய 2 பேரின் அமைச்சரவையிலும் ஏற்கனவே அமைச்சராக பதவி வகித்து இருக்கிறார். அதோடு ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தின் சட்டசபையில் துணை சபாநாயகராகவும் இருந்துள்ளார்.
28 வயது என்ஜினீயரான கிடாரி ஷ்ரவன் குமார், கடந்த செப்டம்பர் மாதம் மாவோயிஸ்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்ட எம்.எல்.ஏ. கிடாரி சர்வேஸ்வர ராவின் மகன் ஆவார். இவர் ஆந்திர சட்டசபையில் உறுப்பினராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Label