OUR CLIENTS
விவசாயத்தை பாதுகாக்க வயலில் களமிறங்கிய தச்சை வேதிக் பள்ளி மாணவ, மாணவிகள்!
விவசாயத்தை பாதுகாக்க வயலில் களமிறங்கிய தச்சை வேதிக் பள்ளி மாணவ, மாணவிகள்! Posted on 13-Nov-2018 விவசாயத்தை பாதுகாக்க வயலில் களமிறங்கிய தச்சை வேதிக் பள்ளி மாணவ, மாணவிகள்!

திருநெல்வேலி, நவ.13-
விவசாயத்தை பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு  பள்ளி மாணவ, மாணவியர்கள் அருகில் உள்ள விவசாய விளைநிலங்களுக்குச் சென்று விவசாய மக்களோடு மக்களாக நாற்று நடவு  செய்தனர். 
விவசாயி ஒருவர் விவசாய நிலத்தை எவ்வாறு கையாள வேண்டும், எந்ததெந்த காலங்களில் என்ன பயிரிடலாம்,  நடவு முறை, களை எடுத்தல், விளைவிப்பதற்கு ஏற்ற மண்ணின் பக்குவம் ஆகியவை மாணாக்கர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மாணவர்கள் விவசாயிகளோடு வயல்களில் இறங்கி நாத்து நடவு செய்தும், களை எடுத்தும் அனுபவ அறிவியலை கற்றுக்கொண்டனர். நாட்டின் முதுகெலும்பாகிய விவசாயத்தை இனி வருங்காலங்களில் பேணிக் காப்போம் என்ற உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், விவசாயிகளின் சிரமங்களையும் அறிந்துகொண்ட மாணவர்கள் பிற்காலத்தில் கண்டிப்பாக விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்போம் என்றும் உறுதியெடுத்தனர். நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் செந்தில் பிரகாஷ், இயக்குனர் திலகவதி, பொது முதல்வர் சோமசுந்தரி, பொது மேலாளர் ஜிபி அய்யர்,  மேலாளர் செல்வராஜ் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

Label