OUR CLIENTS
மத்திய அரசுடன் மோதல் பிரதமர் மோடியுடன் ரிசர்வ் வங்கி கவர்னர் சந்திப்பு!
மத்திய அரசுடன் மோதல் பிரதமர் மோடியுடன் ரிசர்வ் வங்கி கவர்னர் சந்திப்பு! Posted on 14-Nov-2018 மத்திய அரசுடன் மோதல் பிரதமர் மோடியுடன் ரிசர்வ் வங்கி கவர்னர் சந்திப்பு!

புதுடெல்லி, நவ.14-

மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கி கவர்னருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் பிரதமர் மோடியை ரிசர்வ் வங்கி கவர்னர் சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 
மத்திய நிதி அமைச்சகத்துக்கும் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
ரிசர்வ் வங்கி தன்னாட்சி அதிகாரம் கொண்டது. அந்த அதிகாரத்துக்கு சவால் விடும் வகையில் ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதி அமைச்சகம் சமீபத்தில் 3 கோரிக்கைகளை வைத்தது.
நிதிபற்றாக்குறையை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தனது கையிருப்பு பணத்தின் பெரும்பகுதியை மத்திய அரசுக்கு மாற்ற வேண்டும் என்பது அதில் ஒரு கோரிக்கை ஆகும். இதற்கு ரிசர்வ் வங்கி உடன்படவில்லை.
இந்த மோதல் வெளிப்படையாக தெரிந்த நிலையில் வருகிற 19&ந்தேதி நடைபெறும் வாரிய கூட்டத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் ராஜினாமா செய்யலாம் என்ற தகவல் வெளியானது. இதை நிதி அமைச்சகம் மறுத்திருந்தது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 9&ந்தேதி இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. நாட்டின் பொருளாதார நிலை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கி கவர்னருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Label