OUR CLIENTS
ரூ.4.86 கோடியில் பேரிடர் கால மீட்பு இயந்திரங்கள் மாநகராட்சிக்கு அமைச்சர் வேலுமணி வழங்கினார்
ரூ.4.86 கோடியில் பேரிடர் கால மீட்பு இயந்திரங்கள் மாநகராட்சிக்கு அமைச்சர் வேலுமணி வழங்கினார் Posted on 14-Nov-2018 ரூ.4.86 கோடியில் பேரிடர் கால மீட்பு இயந்திரங்கள் மாநகராட்சிக்கு அமைச்சர் வேலுமணி வழங்கினார்

சென்னை, நவ.14-

சென்னை மாநகராட்சியில் இயற்கை பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள் வதற்காக ரூ.4 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டிலான மரஅறுவை இயந்திரங்கள், ஹைட்ராலிக் மூலம் இயக்கப்படும் மரக்கிளைகளை நீக்கும் இயந்திரங்கள், நீர் இறைக்கும் பம்புகள் மற்றும் ஜெனரேட்டர்கள் என கூடுதலாக 336 நவீன இயந்திரங்களை எஸ்.பி.வேலுமணி நேற்று 15 மண்டலங்களுக்கு வழங்கினார்.
சென்னை மாநகராட்சியின் எல்லைக் குட்பட்ட பகுதிகளில் பருவமழை மாறுதலின் காரணமாக ஏற்படுகின்ற பேரிடர் நிகழ்வுகளால் சாலைகளில் விழுகின்ற மரங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்திட தற்போது 171 எண்ணிக்கையிலான மர அறுவை இயந்திரங்களும், பருவமழை காலங்களில் தாழ்வான பகுதிகளில் தேங்குகின்ற மழை வெள்ளநீரை உறிஞ்சி வெளியேற்றுவதற்கு தற்போது அதிகதிறன் கொண்ட நீர் இறைக்கும் பம்புகள் 17 எண்ணிக்கையிலும் உள்ளன. பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாவண்ணம் பொது மக்களின் நலனுக்காக வெள்ள நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள 5 ஹார்ஸ்பவர் திறன் கொண்ட  பெட்ரோல் இன்ஜின் மூலம் இயங்கும் ரூ.59,000/ மதிப்பிலான மரஅறுவை இயந்திரங்கள்.  
கூடுதலாக 200 எண்ணிக்கையில் மொத்தம் ரூ.1,18,00,000 மதிப்பீட்டிலும், 25 எச்.சி திறன் கொண்ட ரூ.4,94,764 மதிப்பிலான நீர் இறைக்கும் பம்புகள் கூடுதலாக 30 எண்ணிக்கையில் மொத்தம் ரூ.1,48,42,920 மதிப்பீட்டிலும், மேலும் 8 மீட்டர் உயரத்தில் உள்ள மரக்கிளைகளை அகற்றும் பணிக்காக நவீன வகையிலான ஹைட்ராலிக் மூலம் இயக்கப்படும் மரக்கிளைகளை நீக்கும் ரூ.19,98,000 மதிப்பிலான இயந்திரங்கள்.
6 எண்ணிக்கையில் மொத்தம் ரூ.1,19,88,000 மதிப்பீட்டிலும், மழைக் காலங்களில் தெரு விளக்குகளை ஒளிரச் செய்வதற்காக 2 எச்.சி திறன் கொண்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான ஜெனரேட்டர்கள் 100 எண்ணிக்கையில் மொத்தம் ரூ.1,00,00,000 மதிப்பீட்டில் என மொத்தம் ரூ.4 கோடியே 86 மதிப்பீட்டில் கூடுதலாக 336 நவீன இயந்திரங்கள் மாநில பேரிடர் மேலாண்மை நிதியின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டது.
இவைகளை பெருநகர சென்னை மாநகராட்சியில் பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள் வதற்காக அமைச்சர் வேலுமணி வழங்கினார். இந் நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் உதயகுமார், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் துறைச்சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

Label