OUR CLIENTS
அவன் இவன் திரைப்படத்தில் அவதூறு காட்சிகள்! அம்பை நீதிமன்றத்தில் இயக்குனர் பாலா ஆஜர்!
அவன் இவன் திரைப்படத்தில் அவதூறு காட்சிகள்! அம்பை நீதிமன்றத்தில் இயக்குனர் பாலா ஆஜர்! Posted on 14-Nov-2018 அவன் இவன் திரைப்படத்தில் அவதூறு காட்சிகள்! அம்பை நீதிமன்றத்தில் இயக்குனர் பாலா ஆஜர்!

திருநெல்வேலி, நவ.14-

வழக்கு ஒன்றில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப் பட்டதை தொடர்ந்து அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இயக்குநர் பாலா நேற்றுமுன்தினம் நேரில் ஆஜரானார். 
கல்போத்தி எஸ்.அகோரம் தயாரிப்பில், பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் திரைப்படத்தில்  சிங்கம்பட்டி சமஸ்தானம் மற்றும் காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் ஆகியவை குறித்து அவதூறாக காட்சிகள் உள்ளதாக கூறி, 2013ல் நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கில், ஆர்யா, பாலா, தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அவர்களது மேலாளர் ஆகியோர் ஆஜராகினர். இந்த வழக்கை ஜூன் மாதம் 22ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்ததோடு, அன்று ஆர்யா, பாலா, தயாரிப்பாளர் ஆஜராக உத்தரவிட்டார். ஆனால் அன்றைய தேதியில் மூவருமே நீதிமன்றத்தில் ஆஜராக வில்லை. இவ்வழக்கில் ஆஜராக பலமுறை சம்மன் அனுப்பபட்டும் மூவரும் ஆஜராக வில்லை. இதனிடையே இவ்வழக்கில் ஆஜராக நடிகர் ஆர்யாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து நீதிபதி முரளிதரன், இயக்குநர் பாலா மற்றும் படத்தின் தயாரிப்பாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். பிடிவாரண்ட் பிறக்கப்பிட்டதை தொடர்ந்து அம்பாச முத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இயக்குநர் பாலா நேற்றுமுன்தினம் ஆஜரானார்.

Label