OUR CLIENTS
சிகிச்சையின்றி தொடர் இறப்பு சிறைக்குள் கைதிகள் அலறல்!
சிகிச்சையின்றி தொடர் இறப்பு சிறைக்குள் கைதிகள் அலறல்! Posted on 14-Nov-2018 சிகிச்சையின்றி தொடர் இறப்பு சிறைக்குள் கைதிகள் அலறல்!

வேலூர், நவ.14-

 வேலூர் சிறையில் முறையான சிகிச்சையின்றி கைதிகள் இறப்பு அதிகரித்து வருவதால் வேறு சிறைக்கு மாற்றும்படி அதிகாரிகளிடம் கைதிகள் கடிதம் கொடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள் சிறையில் தற்போதைய நிலவரப்படி 900 கைதிகள் உள்ளனர். சிறையில் சுகாதாரம் இல்லாததால் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்களால் கைதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தவிர சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், இதய நோயால் கைதிகள் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சிறைக்குள் 24 மணி நேர மருத்துவமனை உள்ளது. இங்கு டாக்டர்கள் சரியாக வராததால் சரியான சிகிச்சை கிடைப்பதில்லை. இதனால் உடல்நிலை மோசமடையும் கைதிகளுக்கு சிறை மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். அங்கு பலர் இறக்கின்றனர். நோய் முற்றிய நிலையில் கடைசி நேரத்தில் வருவதால் கைதிகள் இறப்பு அதிகரித்துள்ளது என்ற குற்றச்சாட்டு உள்ளது. கடந்த ஜனவரி முதல் இன்று வரை உடல் நலக்குறைவால் 15 கைதிகள் இறந்துள்ளனர். இதனால் பீதியடைந்த மற்ற கைதிகள் தங்களை வேறு சிறைக்கு மாற்றும்படி அதிகாரிகளிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.

Label