OUR CLIENTS
1ம் வகுப்பு பள்ளி மாணவியை கழிவறையில் வைத்து பள்ளி நிர்வாகம் மூடிச் சென்றதால் பள்ளி முற்றுகை!
1ம் வகுப்பு பள்ளி மாணவியை கழிவறையில் வைத்து பள்ளி நிர்வாகம் மூடிச் சென்றதால் பள்ளி முற்றுகை! Posted on 14-Nov-2018 1ம் வகுப்பு பள்ளி மாணவியை கழிவறையில் வைத்து பள்ளி நிர்வாகம் மூடிச் சென்றதால் பள்ளி முற்றுகை!

வாணியம்பாடி, நவ.14-

வாணியம்பாடியில் ஒன்றாம் வகுப்பு பள்ளி மாணவியை கழிவறையில் வைத்து பள்ளி முடியதால் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி பஷீராபாத் பகுதியில் நகராட்சி முஸ்லிம் பெண்கள் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 270 மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் அதே பகுதியை சேர்ந்த நசீம் என்பவரின் 3 மகள்கள் இப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். இதில் 1ம் வகுப்பு படிக்கும் மாணவி ஷாஜீயா நேற்றுமுன்தினம் மாலை 3.30 மணிக்கு கழிவறைக்கு சென்றுள்ளார். ஆனால் பள்ளி நிர்வாகம் மாணவியை கழிவறையில் வைத்து மூடிவிட்டு சென்றுவிட்டனர். இதனால் மாணவி கழிவறையின் உள்ளேயே சிக்கிக்கொண்டார். பள்ளி முடிந்து மற்ற இரண்டு சகோதரிகள் வீட்டுக்குச் சென்று வீட்டில் பார்த்த போது ஷாஜியாவை காணவில்லை. இதனால் பல இடங்களில் தேடிப் பார்த்துவிட்டு மீண்டும் பள்ளிக்குச் சென்றனர். அப்போது ஆசிரியைகள் பள்ளியை பூட்டிவிட்டு வீட்டுக்குச் செல்ல தயாராக இருந்தனர். அப்போது மாணவிகள் தங்களின் தங்கையை காணவில்லை என்று ஆசிரியைகளிடம் கூறியதால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியைகள் பள்ளியின் பூட்டை திறந்து உள்ளே சென்று வகுப்பறைகளில் தேடினர். கடைசியாக கழிவறையில் இருந்து மாணவியின் அழுகுரல் கேட்டு கழிவறையை திறந்து பார்த்தபோது மாணவி உள்ளே அழுது கொண்டிருந்தார். அவரை சகோதரிகள் பத்திரமாக வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் மற்றும் அந்தப் பகுதி மக்கள் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தை கண்டித்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியை கழிவறையில் வைத்து பூட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை பெற்றோர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Label