OUR CLIENTS
கஜா புயல் எதிரொலி நாகை, கடலூரில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!
கஜா புயல் எதிரொலி நாகை, கடலூரில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! Posted on 15-Nov-2018 கஜா புயல் எதிரொலி நாகை, கடலூரில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

சென்னை, நவ.15- 
 
கஜா புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் அறிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான கஜா புயல் கடலூர்- பாம்பன் இடையே இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனை கடலூர் மாவட்டத்திற்கான சிறப்பு அதிகாரி ககன் தீப்சிங் பேடி பார்வையிட்டு வருகிறார்.
புயல் காரணமாக இன்று பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை என கலெக்டர் அன்புசெல்வன் அறிவித்து உள்ளார்.
மாணவர்களின் நலன் கருதி மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது என ஆட்சியர் அன்புசெல்வன் கூறினார்.

Label