OUR CLIENTS
கலிபோர்னியா காட்டுத்தீ
கலிபோர்னியா காட்டுத்தீ Posted on 15-Nov-2018 கலிபோர்னியா காட்டுத்தீ

பாரடைஸ், நவ.15-

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 50 ஆக உயர்ந்துள்ளது.
கலிபோர்னியா மாகாணத்தின் வடக்கு பகுதியில் சாக்ரமண்டோ நகருக்கு வடக்கே கடந்த நவம்பர் 8ஆம் தேதி முதல் காட்டுத்தீ வேகமாக பரவத் தொடங்கியது. 80 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதால் சில மணி நேரத்தில் 1,30,000 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து சாம்பலானது. இந்த தீயில் சிக்கி 6,500க்கும் மேலான வீடுகள், 260க்கும் மேலான வணிக வளாகங்கள் எரிந்து உருக் குலைந்தன. பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தஞ்சமடைந்து வருகின்றனர்.
இந்த காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் பலியானதாக முதற்கட்ட தகவலில் தெரியவந்தது. அவர்களில் 5 பேர் தங்கள் கார்களின் அருகிலும், 3 பேர் வீடுகளுக்கு வெளியேயும், ஒருவர் வீட்டுக்குள்ளும் எரிந்து கரிக்கட்டைகள் போல கிடந்ததாக பட்டி கவுண்டி ஷெரீப் கோரி ஹோனியா தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் பலரின் நிலைமை மோசமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. காணாமல் போனவர்களை  தேடும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

Label