OUR CLIENTS
புரோ கபடி தெலுங்கு டைட்டன்சிடம் வீழ்ந்தது புனே அணி
புரோ கபடி தெலுங்கு டைட்டன்சிடம் வீழ்ந்தது புனே அணி Posted on 15-Nov-2018 புரோ கபடி தெலுங்கு டைட்டன்சிடம் வீழ்ந்தது புனே அணி

மும்பை, நவ.15-

புரோ கபடி போட்டியில், தெலுங்கு டைட்டன்சிடம் புனே அணி தோல்வியடைந்தது.
12 அணிகள் இடையிலான 6-வது புரோ கபடி லீக் திருவிழா பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் நேற்றிரவு அரங்கேறிய 60-வது லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 28-25 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை வீழ்த்தி 5-வது வெற்றியை பதிவு செய்தது. 20 முறை ரைடுக்கு சென்று 8 புள்ளிகள் எடுத்த டைட்டன்ஸ் வீரர் ராகுல் சவுத்ரி, தங்களது அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். மற்றொரு ஆட்டத்தில் யு மும்பா (மும்பை அணி) அணி 41-24 என்ற புள்ளி கணக்கில் உ.பி. யோத்தாவை தோற்கடித்து 8-வது வெற்றியை பெற்றது.

Label