OUR CLIENTS
அடிப்படை வசதிகள் இல்லாத ஆண்டர்சன் பேட்டை!
அடிப்படை வசதிகள் இல்லாத ஆண்டர்சன் பேட்டை! Posted on 15-Nov-2018 அடிப்படை வசதிகள் இல்லாத ஆண்டர்சன் பேட்டை!

கோலார் தங்கவயல், நவ.15-
கோலார் தங்கவயலின் முக்கிய பகுதியாக விளங்கும் ஆண்டரசன்பேட்டை அடிப்படை வசதிகள் இல்லாத அவல நிலையில் உள்ளது.
கர்நாடக அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு கோலார் தங்கவயல் தொகுதியை புறக்கணிக்கிறது என்ற மனக்குறை தங்கவயல் மக்களிடம் உள்ளது. ஆனால் 'தங்கவயலிலேயே  ஆண்டரசன்பேட்டை பகுதி புறக்கணிக்கப்படுகிறது' என்ற வேதனை அந்த பகுதி மக்களிடம் இருக்கிறது. பெயரளவில் திருவள்ளுவர் மார்க்கெட் நொடிந்த நிலையில் உள்ளது. குப்பை கூலங்கள் குவிந்து சுகாதார சிர்கேட்டிற்க்கு வழி வகை செய்கிறது.முக்கிய சாலையின் நடைபாதையில் சமன் இல்லாத கரடு முரடான கல் பலகைகள் பதிக்கப்பட்டுள்ளதால் முதியவர்கள் அதில் தடுமாறி நடந்து செல்வது பரிதாபம்.
கடந்த  2000 மாவது ஆண்டில் ஆண்டரசன்பேட்டை பேருந்து நிலையம் புனரமைக்கப்பட்டது.தங்கவயலில் இருந்து ஆந்திர மாநிலம் குப்பம், தமிழக கிருஸ்ணகிரி ஆகிய ஊர்களுக்கு பேருந்து மூலம் ஆண்டரசன்பேட்டை வழியாக தன செல்ல முடியும்.ஆனால் பேருந்துகள் நிலையத்தின் உள்ளே சென்று ,நின்று செல்வதில்லை.சாலையோரங்களிலேயே நின்று பயணிகளை ஏற்றி கொண்டு கிளம்பி விடுகின்றன.மேலும் ஆண்டரசன்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. இதனால் கடந்த பதினெட்டு ஆண்டுகளாக இந்த பேருந்து நிலையம் பயன் படாத நிலையில் உள்ளது.இந்த பேருந்து நிலையத்தை செயல் படுத்த வேண்டும் என்று பகுதி பொது மக்களும் ,பொதுநல அமைப்புகளும், பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பலன் இன்றி சோர்ந்து போய் விட்டனர்.ஆண்டர்சன் பேட்டை வளர்ச்சி பெரும் வகையில் அந்த பகுதியில் அரசு அலுவலகங்களை அமைக்க வேண்டும் என்பதும் பகுதி மக்களின் நீ ண்ட நாள் கோரிக்கை தங்கசுரங்கம் நல்ல நிலையில் இயங்கிய போது முக்கிய வணிக பகுதியாக திகழ்ந்த ஆண்டரசன்பேட்டை தற்போது மற்ற பகுதிகள் வளர்ச்சி அடையும் பொது ,பின்னடைவை நோக்கி செல்வதை அரசோ,மக்கள் பிரதிநிதிகளோ கண்டுகொள்ளவில்லையே என்று,வேதனை தெரிவிக்கின்றனர் .

Label