OUR CLIENTS
எரிவதில்லை எச்சரிக்கை விளக்கு விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்!
எரிவதில்லை எச்சரிக்கை விளக்கு விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்! Posted on 15-Nov-2018 எரிவதில்லை எச்சரிக்கை விளக்கு விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்!

விருதுநகர், நவ.15-

வாகனங்களில் எச்சரிக்கை விளக்குகளை எரிய விடாமல் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. விதிமீறுவோர் மீது போலீசார் நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தின் பல பகுதிகளில் லாரிகள், கனரக வாகனங்கள், நாற்கர சாலையில் செல்லும் போது வாகனத்தின் பின் பகுதியில் உள்ள 'பேக் லைட்' யினை எரிய விடாமல் செல்கின்றனர். பெரும்பாலான லாரிகளில் பின்புறம் சிவப்பு விளக்கு எரிவதே இல்லை. இதனால் வாகனங்கள் ரோட்டின் ஓரம் நிற்பது தெரியாமல் மற்ற வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது.
ரோட்டில் வாகனங்கள் செல்லும் போது, சிவப்பு மற்றும் பிரேக் பயன்படுத்தும் போது எரியும் எச்சரிக்கை விளக்கு எதையும் பயன்படுத்தாமல் திடீரென 'பிரேக்' போடுகின்றனர். இதனால், பின்னால் வந்த வாகனம் முன்னே உள்ள வாகனத்தின் மீது மோத வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதை டிரைவர் உணருவது இல்லை. பின்னல் எரியும் எச்சரிக்கை விளக்குகள் எவ்வளவு முக்கியமானவை என்று டிரைவர்கள் பலர் உணருவது இல்லை. பழுதானாலும் அதை சரி செய்யாமல், அப்படியே செல்வதால் விபத்து அதிகரிக்கிறது. இதேபோன்று, இருசக்கர வாகனங்களில் செல்வோர் 'சைடு கண்ணாடி' இன்றி ஓட்டுகின்றனர். இதனாலும் விபத்து ஏற்படுகிறது.
பேஷன்பைக் என்று வாங்கி, அதில் சைடு கண்ணாடி பொறுத்தாமல் செல்கின்றனர். இதனாலும், பின்னால் எந்த வாகனம் வருகிறது என்று தெரியாமல், வாகனத்தை திருப்பும் போது விபத்து ஏற்படுகிறது. எச்சரிக்கை விளக்கு இல்லாமல், ஏற்பட்ட விபத்துக்களே அதிகமாக உள்ளது. விதி மீறும் வாகனங்கள் மீது போலீசார், வட்டார போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து விபத்துக்களை குறைக்க வேண்டும். ஆனால் அப்படியெல்லாம் செய்யாமல் அவர்களிடமே கைநீட்டி ÔபÕ வைட்டமின் வாங்கி கொண்டு அந்த வாகனங்களை அனுப்பி விடுகின்றனர் அன்ட புழுகனும், ஆகாச புழுகனும் என்று சொல்வதுண்டு. இப்படி காவல் துறை உயரதிகாரிகளுக்கு அல்வா கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் போலீசார். கையூட்டு ஒழிந்தால்தான் நாடு உருப்படும். சமுதாயமும் உயர்ந்த அந்தஸ்துக்கு செல்லும்.

Label