OUR CLIENTS
சுங்கச்சாவடியில் லாரிகளிடம் நூதன முறையில் பணம் கொள்ளை விவசாய மின் இணைப்பிற்கு, 'ஆதார்' முறைகேட்டை தடுக்க வாரியம் அதிரடி!
சுங்கச்சாவடியில் லாரிகளிடம் நூதன முறையில் பணம் கொள்ளை விவசாய மின் இணைப்பிற்கு, 'ஆதார்' முறைகேட்டை தடுக்க வாரியம் அதிரடி! Posted on 15-Nov-2018 சுங்கச்சாவடியில் லாரிகளிடம் நூதன முறையில் பணம் கொள்ளை விவசாய மின் இணைப்பிற்கு, 'ஆதார்' முறைகேட்டை தடுக்க வாரியம் அதிரடி!

சென்னை, நவ.15-

முறைகேடுகளை தடுக்க இலவச மின்சாரம் வழங்கப்படும் விவசாயிகளிடம் இருந்து 'ஆதார்' எண் விபரங்களை பெற மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் விவசாயத்தை ஊக்கப்படுத்த இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. தற்போது வரை 21 லட்சம் விவசாய இணைப்புகளுக்கு மின்சாரம் வழங்குவதால் மின் வாரியத்திற்கு ஆண்டுக்கு 3,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகிறது. இந்தத் தொகையை மின் வாரியத்திற்கு மானியமாக தமிழக அரசு வழங்குகிறது.
அரசியல் பின்புலம் உள்ளவர்கள் வசதி படைத்தவர்கள் ஒரே பெயரில் பல விவசாய மின் இணைப்புகளை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அரசு வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் சப்ளையில் முறைகேடுகளை தடுக்க நேரடி மானிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களிடம் 'ஆதார்' எண் வாங்கப்பட்டன. சந்தை விலைக்கு சிலிண்டர் வாங்கியதும் ஆதார் எண் கொடுத்துள்ள வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் அதற்கான மானிய தொகையை மத்திய அரசு நேரடியாக வரவு வைக்கிறது. இதனால் ஒரே பெயரில் பல காஸ் இணைப்புகள் பெற்றது கண்டறியப்பட்டது. பின் அவை ரத்து செய்யப்பட்டதால் மத்திய அரசுக்கு செலவு மிச்சமானது. மிச்சமான செலவுகளில் இருந்து கூடுதல் காஸ் இணைப்புகள் விரைவாக வழங்கப்பட்டு வருகின்றன.
இதனால் மானிய திட்டங்களில் முறைகேட்டை தடுக்க பயனாளிகளிடம் இருந்து ஆதாரை பெறுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதையடுத்து இலவச மின்சாரம் வழங்கப்படும் விவசாயிகளிடம் இருந்து 'ஆதார்' எண் விபரங்களை வாங்க மின் வாரியம் தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: சாதாரணம் மற்றும் சுயநிதி பிரிவில் விவசாய மின் இணைப்பு வழங்கப்படுகிறது. சாதாரண பிரிவில் மின்சாரம், மின் வழித்தட செலவு என அனைத்தும் இலவசம்.
சுயநிதி பிரிவில் வழித்தட செலவை விவசாயிகள் ஏற்க வேண்டும்; மின்சாரம் மட்டும் இலவசம்.
தற்போது சுயநிதி பிரிவில் அதிக கட்டணம் உள்ள 'தத்கல்' திட்டத்தில் மின் இணைப்பு வழங்கும் போது ஆதார் பெறப்படுகிறது. ஏற்கனவே உள்ள 21 லட்சம் விவசாய மின் இணைப்புகளிலும் ஒருவரே பல இணைப்புகள் வைத்திருப்பதாக அதிக புகார்கள் வருகின்றன. அனைவரிடமும் ஆதார் வாங்கினால் யாரெல்லாம் கூடுதல் மின் இணைப்பு பெற்றுள்ளனர் என்ற விபரம் தெரியவரும்.
இதன்படி கூடுதல் மின் இணைப்புகளை ரத்து செய்து விவசாயத்தில் ஆர்வம் உள்ள முதல் தலைமுறை விவசாயிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Label