OUR CLIENTS
கருணாநிதி உருவச் சிலை டிசம்பர் 16 ஆம் தேதி திறப்பு திமுக அறிவிப்பு
கருணாநிதி உருவச் சிலை டிசம்பர் 16 ஆம் தேதி திறப்பு திமுக அறிவிப்பு Posted on 16-Nov-2018 கருணாநிதி உருவச் சிலை டிசம்பர் 16 ஆம் தேதி திறப்பு திமுக அறிவிப்பு

சென்னை, நவ.16-

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உருவச் சிலை வரும் டிசம்பர் 16 -ம் தேதி திறக்கப்படும் என, அக்கட்சி தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், "மறைந்த தலைவர் கருணாநிதியின் உருவச் சிலையை வருகின்ற டிசம்பர் மாதம் 16 -ம் தேதி அகில இந்திய தலைவர்கள் பங்கேற்று  சிறப்பாக  திறந்து  வைக்கவிருக்கிறார்கள். ஐந்து முறை முதல்வராக இருந்து  தமிழகத்திற்கு  எண்ணற்ற  மக்கள்  நலத்  திட்டங்களை  நிறைவேற்றித்  தந்து தமிழகத்தில் மட்டுமின்றி   -உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் உன்னதமாக கொலுவீற்றிருக்கும் தலைவரின் உருவச் சிலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழகம் அண்ணா அறிவாலயத்தின் முகப்பில் நிறுவப்படவுள்ளது.
புனரமைக்கப்பட்ட அண்ணா சிலையும் - கருணாநிதியின் சிலையும் ஒரே இடத்தில் அருகருகே அமைய உள்ளன. டிசம்பர் 16 ஆம் தேதி தலைவரின் உருவச் சிலை திறப்பு விழா, எழுச்சிமிகு விழாவாக நடைபெறும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Label