OUR CLIENTS
தேசிய பத்திரிகை தினம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
தேசிய பத்திரிகை தினம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து Posted on 16-Nov-2018 தேசிய பத்திரிகை தினம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

 சென்னை, நவ.16-

தேசிய பத்திரிகை தினத்தையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேசிய பத்திரிகை தினத்தையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- உண்மை நிகழ்வுகளை மக்களுக்கு நடுநிலையோடு எடுத்துரைத்து, அவர்தம் அறிவுக்கண்ணை திறக்கும் உயரிய பணியை ஆற்றுவதால் பத்திரிகை துறை ஜனநாயகத்தின் நான்காவது தூணாக போற்றப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க பத்திரிகை மற்றும் ஊடகத்துறையின் பணியினை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16-ந்தேதி தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில், அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Label