OUR CLIENTS
மீனவர்களுக்காக தூண்டில் என்ற செயலி அறிமுகம்
மீனவர்களுக்காக தூண்டில் என்ற செயலி அறிமுகம் Posted on 16-Nov-2018 மீனவர்களுக்காக தூண்டில் என்ற செயலி அறிமுகம்

சென்னை, நவ.16-

மீனவர்களுக்கான "தூண்டில்" என்ற செல்போன் செயலியை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிமுகப்படுத்தியுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை அலுவகத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் ஜெயக்குமார், தூண்டில் என்ற செயலியை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், மழை, புயல், உள்ளிட்ட எச்சரிக்கைகள், மீன்கள் எங்கெல்லாம் அதிகம் கிடைக்கும் என்பது குறித்து இந்த செயலி மூலம் மீனவர்கள் அறிந்து கொள்ள முடியும் என்றார். டவர் இல்லாத போதும், ஜிபிஎஸ் மூலம் மீனவர்கள் எங்குள்ளனர் என்பதை இதன்மூலம் கண்டறியலாம் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இலங்கை அரசியல் விவகாரத்தில் ஸ்டாலினின் ஜலதோஷம், அங்கும் தொற்றி விட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.

Label