OUR CLIENTS
புயல் எச்சரிக்கையை மீறி நடுக்கடலில் மீன் பிடித்த மீனவர்கள்!
புயல் எச்சரிக்கையை மீறி நடுக்கடலில் மீன் பிடித்த மீனவர்கள்! Posted on 16-Nov-2018 புயல் எச்சரிக்கையை மீறி நடுக்கடலில் மீன் பிடித்த மீனவர்கள்!

புதுக்கோட்டை, நவ.16-

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 6 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கஜா புயல் எச்சரிக்கையை மீறி நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 3 பேரை கடலோர காவல் படையினர் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள கஜா புயல் நேற்று மாலை பாம்பன் மற்றும் கடலூர் இடையே கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 6 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டனர். இதற்கிடையே, புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணம் மீன்பிடி தளத்திலிருந்து கஜா புயல் எச்சரிக்கையை மீறி நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புரட்சிதாசன், பரசுராம், அசோக் ஆகிய மூன்று பேரை மீன்வளத் துறை மற்றும் கடலோர குழும போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Label