OUR CLIENTS
வி., சிறுத்தை கூட்டணியில் உள்ளது என்பதை திமுக தான் அறிவிக்க வேண்டும் திருமாவளவன் பேட்டி
வி., சிறுத்தை கூட்டணியில் உள்ளது என்பதை திமுக தான் அறிவிக்க வேண்டும் திருமாவளவன் பேட்டி Posted on 16-Nov-2018 வி., சிறுத்தை கூட்டணியில் உள்ளது என்பதை திமுக தான் அறிவிக்க வேண்டும் திருமாவளவன் பேட்டி

வேலூர், நவ.16-

விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் உள்ளது என்பதை திமுக தான் அறிவிக்க வேண்டும் என்று திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
வேலூரில் பொய்கையில், விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பங்கேற்க திருமாவளவன் வேலூர் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- இலங்கை அதிபர் சிறிசேனா பதவி விலகுவது தான் சரியாக இருக்கும். பணமதிப்பு நீக்கம் நடவடிக்கையில் மோடி சர்வாதிகார போக்குடன் செயல்பட்டார். 2019 நாடாளுமன்ற பொது தேர்தலில் மோடிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
தி.மு.க.வுடன், விடுதலை சிறுத்தை கூட்டணி அதிகாரபூர்வமாக அறிவிக்கக்கூடிய பொறுப்பு தி.மு.கவு.க்கு தான் உண்டு. தி.மு.க.வுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணக்கமாக தான் இருந்து வருகிறது. பா.ஜ.க கொள்கை கோட்பாடு இந்திய தேசத்திற்கு, இந்திய மக்களுக்கு எதிரானது என்பதை சுட்டிக்காட்டும் விதமாக தி.மு.க உள்ளிட்ட எதிர் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட முன் வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Label