OUR CLIENTS
கே.ஜி.எப். திரைப்படத்துக்கு தங்கவயலில் கடும் எதிர்ப்பு!
கே.ஜி.எப். திரைப்படத்துக்கு தங்கவயலில் கடும் எதிர்ப்பு! Posted on 16-Nov-2018 கே.ஜி.எப். திரைப்படத்துக்கு தங்கவயலில் கடும் எதிர்ப்பு!

கோலார் தங்க வயல், நவ.16-

பல மொழிகளில் வெளியாக இருக்கும் கே.ஜி.எப். அத்தியாயம் ஒன்று திரைப்படத்தில் தவறான தகவல்கள் உள்ளதாக, தங்கவயல் இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
 தங்கச் சுரங்கத்தால் உலகப்புகழ் பெற்ற  கோலார் தங்க வயல் குறித்து மட்டுமின்றி அதன் கலை, கலாச்சார வரலாற்று பின்னணியால் பெருமிதம் கொள்பவர்கள் தாங்கவயல் மக்கள் . ஆனால், தங்கவயல் குற்றச் சம்பவங்கள் நிறைந்த நகரமாக ஊடகங்களில் மிகைப்படுத்தப்படுகிறது என்ற மனக்குறையும் மக்களிடம் உள்ளது,  எங்கு சென்றாலும் தங்கவயல் சேர்ந்தவர் என்றாலே ஒதுக்கப்படும் நிலை உருவாகியது .இதனால் தங்கவயல் இளைஞர்கள் வேலை வாய்ப்புகளையும் இழந்தனர் .
இந்த நிலையில்  கன்னட நடிகர் யஷ் நடித்துள்ள கே.ஜி.எப். திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வன்முறை காட்சிகள் நிறைந்துள்ள இந்த டிரைலரில் தங்கச்சுரங்கம் 1951ம் வருடம் தொடங்கப்பட்டதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கோலார் தங்கவயலை இந்தப்படம் தவறாக சித்தரிக்குமோ என்ற அச்சம் இளைஞர்களிடம் எழுந்துள்ளது.
கோலார் தங்க வயல் இளைஞர்களால் கே.ஜி.எப். எங் லீடர்ஸ்என்ற பெயரில் வாட்ஸ் அப் குழு நிர்வகிக்கப்பட்டு வருகிறது . இந்த குழுவில் கே.ஜி.எப். திரைப்படத்தில் தங்கவயல் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டிருந்தால் படம் வெளியாக நீதிமன்றத்தில் தடை வாங்குவோம் என்று பதிவிட்டுள்ளனர்.
கோலார் தங்க வயல் சைனைடு மண் மலை மீது பிரமாண்டமான அரங்குகள் [செட் ]அமைக்கப்பட்டு கே.ஜி.எப். திரைப்பட படப்பிடிப்பு நடத்தப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, சீன, ஜப்பான் ஆகியவற்றில் மொழி மாற்றம் செய்து வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ள இந்த திரைப்படம் வெளியான பிறகே கோலார் தங்க வயலைச் சிறப்பிக்கும் படமா,அல்லது சிறுமைப்படுத்தும் படமா? என்பது தெரியவரும்.

Label