OUR CLIENTS
சப்பை நோய் தாக்கி 10 பசு மாடுகள் பலி கால்நடைத்துறையினர் தொடர்ந்து குறட்டை!
சப்பை நோய் தாக்கி 10 பசு மாடுகள் பலி கால்நடைத்துறையினர் தொடர்ந்து குறட்டை! Posted on 16-Nov-2018 சப்பை நோய் தாக்கி 10 பசு மாடுகள் பலி கால்நடைத்துறையினர் தொடர்ந்து குறட்டை!

வேலூர், நவ.16- 

அரக்கோணம் அருகே கடந்த ஒரு வாரத்தில் சப்பை நோய் தாக்கி 10-க்கும் மேற்பட்ட பசு மாடுகள் இறந்துள்ளன. கால்நடைத்துறையினர் மாவட்டம் முழுவதும் குறட்டை விடும் நிலையில் உள்ளனர்.
அரக்கோணம் வட்டாரத்துக்கு உள்பட்ட வேலூர், கோணலம் ஆகிய இரு கிராமங்களிலும் முக்கியத் தொழில் மாடு வளர்த்தல் ஆகும். இதன் மூலம் கிடைக்கும் பால், அரக்கோணம், திருத்தணி போன்ற ஊர்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக வேலூர் கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட பசு மாடுகள் சப்பை நோய் தாக்கிய நிலையில் இறந்து விட்டதாக கிராம மக்கள் கூறுகின்றனர். 
இக்கிராமத்தில் உள்ள மேட்டுத்தெருவில் 3 மாடுகளும், பஜனை கோயில் தெருவில் 2 மாடுகளும், பிள்ளையார் கோயில் தெருவில் 3 மாடுகளும், கோணலம் கிராமத்தில் 5-க்கும் மேற்பட்ட மாடுகளும் கடந்த 4 நாள்களில் இறந்தன. 
மாடுகள் நடக்க சிரமப்படுவதாகவும் 2 நாள்களுக்குப் பிறகு பின்னங்கால்கள் நடக்க முடியாமல் நொண்டுவதாகவும், அதன் பிறகே மாடுகள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது தெரியவருவதாக விவசாயிகள் கூறுகின்றனர். மேலும், மேய்ச்சலுக்கு செல்லும் வழியிலேயே மாடுகள் இறந்து விடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
நடக்க சிரமப்படும் நாளில் இருந்தே உணவை சரியாக உட்கொள்ளாத நிலையில் மாடுகள் இருப்பதாகாவும், மருத்துவர்கள் இம்மாடுகளுக்கு சிகிச்சை அளித்தாலும் நோய் வந்தால் குணமாவது இல்லை எனவும்  கூறுகின்றனர். இதுகுறித்து வேலூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன் கூறியதாவது:  கடந்த சில நாள்களுக்கு முன் எனது பசு மாட்டுக்கு முதலில் காது அருகே வீக்கம் காணப்பட்டது. இதுகுறித்து மருத்துவரிடம் காண்பித்தால் அவர் குளவி கொட்டிவிட்டது எனக் கூறினார். ஆனால் மறுநாள் அதே வீக்கம் கழுத்துவரை ஏற்பட்டு சில மணி நேரங்களில் மாடு இறந்துவிட்டது. தினமும் 4 லிட்டர் பால் அளித்து வந்த மாடு இறந்தது என் குடும்பத்துக்கு பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார் அவர். 
இது குறித்து இப்பகுதி கால்நடை மருத்துவர் கௌரிசங்கரிடம் கேட்டதற்கு, இதுபோன்று தகவல் தனக்கு வரவில்லை எனவும், கடந்த ஒரு மாதத்துக்கு முன் கன்றுக்குட்டிகள் சப்பை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிந்து அப்பகுதிகளுக்குச் சென்று கால்நடைகளுக்கு ஊசி போட்டுவிட்டு வந்ததாகவும் தெரிவித்தார். 
மேலும், இது சப்பை நோய் பாதிப்பு தான் என்றும், இது குணமாக்கக்கூடிய நோய் எனவும்,  உடனடியாக வேலூர், கோணலம் கிராமங்களுக்கு சென்று கால்நடைகளைப் பார்வையிட்டு சிகிச்சை அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். தினமும் 10 லிட்டர் வரை பால் கொடுக்கக்கூடிய சுமார் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரை மதிப்புள்ள பசு மாடுகள் இறந்துவிட்டால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். சிகிச்சை அளித்தும் மாடுகள் இறப்பதால் இதுகுறித்து கால்நடைத் துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. ஆனால் கால்நடைத்துறையினர் குறட்டை விடுகின்றனர். வசூல் வேட்டையை மட்டும் கவனித்து விட்டு விட்டு வீட்டுக்கு புறப்பட்டு விடுகின்றனர். 

Label