OUR CLIENTS
டாடா மோட்டார்ஸ் கார் விற்பனையில் சாயர் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் மோசடி! நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு!
டாடா மோட்டார்ஸ் கார் விற்பனையில் சாயர் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் மோசடி! நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு! Posted on 16-Nov-2018 டாடா மோட்டார்ஸ் கார் விற்பனையில் சாயர் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் மோசடி! நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு!

வேலூர், நவ.16-
 
வேலூர் பெருமுகையில் உள்ள டாடா மோட்டார்ஸில் கார் வாங்கிய நுகர்வோரை ஏமாற்றிய சாயர் ஆட்டோமோட்டிவ் (பி) லிட் நிறுவனத்தின் மீது பாதிக்கப்பட்டவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்.
வேலூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெருமுகையில் டாடா மோட்டார்ஸ்  நிறுவனம் கார்களை விற்பனை செய்யும் மையத்தை நடத்தி வருகிறது. இதன் ஏஜென்சியை சாயர் ஆட்டோமோட்டிவ் (பி) லிட்., நிறுவனம் எடுத்துள்ளது. இவர்கள் நுகர்வோரை நூதன முறையில் ஏமாற்றி கார்களை விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், வேலூரைச் சேர்ந்த நுகர்வோர் ஒருவர் கடந்த 16&02&2018 அன்று டாடா இன்டிகோ காரை வாங்கியுள்ளார். அந்த காரை விற்பனை செய்த சாயர் நிறுவனமானது தங்க காசு தருவதாகவும், டிஸ்கவுண்ட் தருவதாகவும் கூறி அந்த டாடா இன்டிகா காரை நுகர்வோர் தலையில் கட்டியுள்ளது. அந்த காரானது 2017 மாடல் ஆகும். இதை 2018ல் விற்பனை செய்துள்ளனர் தந்திரமாக என்று சொன்னால் அது மிகையாகாது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் ஏதோ குறைபாடுள்ள காரை ஏமாற்றி விற்பனை செய்துவிட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த கார் மஞ்சள் நிற போர்ட்டை (ஜி-ஙிஷீணீக்ஷீபீ) கொண்டது. இந்த காரை வாங்கிய நாள் முதல் சரியாகவே இயங்கவில்லை. ஜி-ஙிஷீணீக்ஷீபீ வாகனம் என்பதால் பயணிகளை ஏற்றி சென்று பெயர் கெட்டது என்றுதான் கூறவேண்டும். அவ்வப்போது வாகனம் நடுரோட்டில் நின்றுவிடுவது பலர் தள்ளித்தான் ஸ்டார்ட் செய்யும் நிலை ஏற்பட்டதால், இந்த காரை வாங்கியும் பயனில்லாமல் வாடிக்கையாளர் தவித்தார். 
இதுகுறித்து கார் வாங்கிய ஒரு வாரத்துக்குள்ளாகவே காரை விற்பனை செய்த நிறுவனத்தையும், கஸ்டமர் கேரையும் தொடர்பு கொண்டு புகார் மீது புகார் சொல்லியும் நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் கண்டும் காணாமல் அலட்சியமாக நடந்து கொண்டுள்ளனர். 
இதனால் அந்த நுகர்வோருக்கு ரூ.7 லட்சம் வரை வீண் செலவு ஆகியுள்ளது. அத்துடன் கார் சரிவர இயங்காததால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். அதுமட்டுமின்றி மாதா மாதம் லோன் கட்டவேண்டி சிரமத்துக்கு உள்ளனார்.  
 இந்த காரில் ஸ்டார்ட் ஆவதில் கோளாறு, பிக் அப் ஆவதில் கோளாறு என்று இரண்டுவித குறைபாடுகள் இருந்து கொண்டே இருக்கிறது. அதுமட்டுமின்றி மகாதேவமலை கோயிலுக்கு பயணிகளை அழைத்து சென்றபோது வாகனம் மலை ஏற முடியாமல் நின்றது. இதுகுறித்து சாயர் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தை தொடர்பு கொண்ட கேட்டதற்கு, இந்த வண்டி மலையேறாது என்று தான்தோன்றிதனமாக பதிலளித்தனர். காரை வாங்கிய நுகர்வோர் மகிழ்ச்சியாக பயன்படுத்த முடியாத நிலை நிலவி வருகிறது. 
குடோனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விற்பனையாகாமல் பழதடைந்த காரை தந்திரமாக ஒரு நுகர்வோரை ஏமாற்றி அவரது தலையில் கட்டி பணத்தை சுருட்டி கொண்டுள்ளது சாயர் நிறுவனம் என்றே சொல்லலாம். இதனால் அந்த சாயர் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டதற்கு அந்த நிறுவனத்தின் விற்பனை மேலாளரும், சர்வீஸ் எக்ஸிகியூடிவ் என்பவரும் சேர்ந்து கொண்டு டாடா வாகனங்கள் அவ்வளவுதான். நீங்கள் பழுதை நீக்க வேண்டுமானால் பணம் செலுத்துங்கள் என்று தெனாவெட்டாக பதில் கூறியுள்ளனர். அத்துடன் விடாமல் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள், எது வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். உங்களால் எங்களை ஒன்றும் செய்ய இயலாது என்று அந்த நுகர்வோரை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய மாதிரி அவரது புண்பட்ட மனதை மேலும் ரணமாக்கியுள்ளனர் சாயர் நிறுவனத்தார். 
இதனால் நுகர்வோருக்கு மேலும் மன உளைச்சல் அதிகமாகியுள்ளது. இவ்வளவும் நடந்த பிறகும் அந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை எளிதில் விடக்கூடாது என்று முடிவு செய்து, வேலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் சேவை குறைபாடு தொடர்பாக வழக்கு தொடர அந்த பாதிக்கப்பட்ட நுகர்வோர் முடிவு செய்துள்ளார்.

Label