OUR CLIENTS
குழந்தை திருமணம் நிறுத்தம்!
குழந்தை திருமணம் நிறுத்தம்! Posted on 16-Nov-2018 குழந்தை திருமணம் நிறுத்தம்!

விழுப்புரம், நவ.16-

திருக்கோவிலூரை அடுத்த சு.கொல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இளைய பாபுவுக்கும் (21) புதன்கிழமை அரகண்ட நல்லூரில் திருமணம் நடைபெற இருந்தது. இதுகுறித்து தகவலறிந்த சமூக நலத் துறையினர் போலீஸார் உதவியுடன் சென்று திருமணத்தைத் தடுத்து நிறுத்தி, சிறுமிக்கு ஆலோ சனைகளை வழங்கினர். இதுகுறித்து போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண் டுள்ளனர். அலங்கார வாகனத்தில் நகர்ப் பகுதியில் பெண் அழைப்பு விமரிசையாக நடத்தப்பட்டு, மண்டபத்தில் இரவு உணவு உபசரிப்பு முடிந்த நிலையில், திருமணம் தடுத்து நிறுத்தப் பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Label