OUR CLIENTS
அரசு மருத்துவமனை வளாகத்தில் கைவிடப்பட்ட நிலையில் மூதாட்டி!
அரசு மருத்துவமனை வளாகத்தில் கைவிடப்பட்ட நிலையில் மூதாட்டி! Posted on 16-Nov-2018 அரசு மருத்துவமனை வளாகத்தில் கைவிடப்பட்ட நிலையில் மூதாட்டி!

காஞ்சிபுரம், நவ.16-

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த 5 நாள்களாக மூதாட்டி ஒருவர் ஆதரவின்றி விடப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆதரவின்றி விடப்பட்ட மூதாட்டி ஒருவர் இருப்பதாக கடந்த 10-ஆம் தேதி தினமணி நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ அதிகாரிகள் வருகையையொட்டி, அங்கிருந்த சிலர் அந்த மூதாட்டியை வெளிநோயாளிகள் தங்குமிடத்தில் தூக்கி வைத்துவிட்டுச் சென்றனர். மருத்துவர்களின் போராட்டம் காரணமாக சென்னை மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ வந்தால் மூதாட்டி இடம் மாற்றப்பட்டு வேறு இடத்தில் படுக்க வைக்கப்பட்டுள்ளார். அந்த மூதாட்டி எழுந்து தண்ணீர் குடிக்கும் நிலையில் கூட இல்லை. சில சமூக ஆர்வலர்கள் மூதாட்டிக்கு உணவும், தண்ணீர் பாக்கெட்டும் வாங்கி வைத்து விட்டுச் செல்கின்றனர். எழுந்து அமரக்கூட முடியாத நிலையில் உள்ள அந்த மூதாட்டிக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிப்பதில்லை என கூறப்படுகிறது. 
ஆதரவின்றி கிடக்கும் மூதாட்டிக்கு உரிய மருத்துவச் சிகிச்சை அளித்து, காப்பத்தில் சேர்க்க மருத்துவ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Label