OUR CLIENTS
மாநில அரசு அனுமதியின்றி மாநிலத்திற்குள் சிபிஐ நுழைய தடை ஆந்திர மாநில அரசு அதிரடி உத்தரவு
மாநில அரசு அனுமதியின்றி மாநிலத்திற்குள் சிபிஐ நுழைய தடை ஆந்திர மாநில அரசு அதிரடி உத்தரவு Posted on 17-Nov-2018 மாநில அரசு அனுமதியின்றி மாநிலத்திற்குள் சிபிஐ நுழைய தடை  ஆந்திர மாநில அரசு அதிரடி உத்தரவு

ஐதராபாத், நவ.17-

ஆந்திர மாநிலத்தில் முன் அனுமதியின்றி சிபிஐ போலீசார் நுழைந்து விசாரணை நடத்தவோ, சோதனைகள் நடத்தவோ முன்கூட்டியே வழங்கிய இருந்த பொது அனுமதியை ஆந்திர மாநில அரசு நவம்பர் மாதம் 8ந் தேதி வாபஸ் வாங்கிவிட்டது.
1946ஆம் ஆண்டு டில்லி சிறப்பு போலீஸ் நிறுவுதல் சட்டத்தின்கீழ் தான் சிபிஐ போலீசார் இயங்கிவருகின்றனர். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிஐ போலீசார் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் தன் விருப்பப்படி நுழைய முடியாது. ஒவ்வொரு முறையும் அனுமதி பெற்றதன் பிறகே மாநிலத்துக்குள் நுழைவது என்பது நடைமுறையில் சாத்தியமானது அல்ல. சிபிஐ போலீசாருக்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவசியமே தோற்கடிக்கப்பட்டு விடும். அதனால் ஒவ்வொரு மாநில அரசும் சிபிஐக்கு பொது அனுமதி வழங்குவது நடைமுறையில் உள்ளது. இந்த பொது அனுமதி வழங்கப்பட்டிருந்தால், அந்த பொது அனுமதி அடிப்படையில் சிபிஐ எந்த நேரத்திலும் சம்பந்தப்பட்ட மாநிலத்திற்குள் நுழைந்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
நவம்பர் மாதம் 8ந் தேதி இந்த பொது அனுமதியை ஆந்திர மாநில அரசு வாபஸ் பெற்றுவிட்டது. அதற்கான அரசு ஆணையையும் ஆந்திர மாநில அரசு வெளியிட்டுள்ளது. ஆந்திர மாநில அரசாணையையும் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆந்திர மாநிலம் தெலுங்கு தேசம் கட்சியின் லங்கா தினகர் என்ற தலைவரின் பேட்டியையும் ஏஎன்ஐ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த அரசாணைக்குப் பின்னால் எந்த அரசியலும் கிடையாது என்றார் லங்கா தினகர்.
சிபிஐயின் மூன்று முதல் நிலைத்தலைவர்கள் உச்சிநீதிமன்றத்தில் வழக்குகளில் சிக்கி உள்ளனர். சிபிஐ தலைவர் அலோக் வர்மா மீது மத்திய பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்துகிறது. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாமீது சிபிஐயோ விசாரணை நடத்தி வருகிறது. இவர்கள் இருவரின் அதிகாரங்களையும் எடுத்துக்கொண்டு வேறு இடங்களுக்கு மத்திய அரசு மாற்றியது. புதிதாக ஒரு இடைக்கால இயக்குநர் நியமிக்கப்பட்டார். அவர் கொள்கை ரீதியாக எந்தப் புதிய முடிவும் எடுக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் ஆணை பிறப் பித்தது. இந்நிலையில் சிபிஐயை எப்படி நம்ப முடியும்.
சிபிஐக்கு வேண்டிய நடவடிக்கைகளை ஆந்திர மாநிலத்தில் ஊழல் எதிர்ப்பு பீரோவே செய்து தரும் என்றார் லங்கா தினகர். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் இந்தச் சிக்கல் தோன்றியுள்ளது. ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கை ஏற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து மோடி அரசுக்கு எதிராக விரிவான எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு முயற்சி செய்து வருகிறார்.
தெலுங்கு தேசம் கட்சியினர்மீது சிபிஐ திடீர் சோதனைகளை நடத்தி அச்சுறுத்துவதற்கு, ஆந்திர அரசின் இந்த உத்தரவால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது எனலாம். ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு பிறப்பித்த அரசாணையை வரவேற்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். சந்திரபாபு நாயுடு செய்தது சரியான செயல்தான். பாரதீய ஜனதா கட்சிதான் சிபிஐக்கு உத்தரவுகளை வழங்குகிறது என்றார் மம்தா.
பாஜகவை ஆட்சியிலிருந்து இறக்க முன்முயற்சி எடுத்து வரும் கட்சிகளில் முன்னோடியாக இருப்பது சத்தீஷ்கர் மாநிலத்தில் கடந்த அக்டோபர் மாதத்தில் இதுபோன்ற பிரச்சினை எழுந்தது. சிபிஐ தனக்குத் தெரியாமல் சத்தீஷ்கர் மாநிலத்தில் விசாரிக்கக்கூடாது என்று சத்தீஷ்கர் அரசு குறிப்பிட்டது. அதனை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் சிபிஐ மனுச் செய்தது. அப்பொழுது சத்தீஷ்கர் மாநிலத்துக்கு வெளியே வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தால் அந்த வெளி மாநில வழக்கை விசாரிக்க சத்திஷ்கர் அரசின் அனுமதி தேவையில்லை என்று டில்லி உயர் நீதிமன்றம் கூறியது. சத்தீஷ்கர் மாநிலத்தில் பதிவு செய்யபட்ட வழக்காக இருந்தால் மாநில அரசின் சம்மதம் அவசியம் என்று டில்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.

Label