OUR CLIENTS
தமிழகத்துக்கு உதவ மத்திய அரசு தயார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
தமிழகத்துக்கு உதவ மத்திய அரசு தயார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி Posted on 17-Nov-2018 தமிழகத்துக்கு உதவ மத்திய அரசு தயார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

சென்னை, நவ.17- 
   
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு உதவ மத்திய அரசு தயாராக இருப்பதாக முதலமைச்சர் பழனிசாமியிடம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு தேவையான உதவிகளைச் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது என்று ராஜ்நாத் சிங் உறுதியளித்தார். இது குறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மத்திய உள்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் அவர்கள்,  நேற்று 16.11.2018 (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களிடம், கஜா புயலினால் தமிழகத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விபரங்களை கேட்டறிந்தார்கள். 
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள், கஜா புயல் தொடர்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் எடுக்கப்பட்ட  நடவடிக்கைகள் குறித்தும், தற்போது கஜா புயலினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும், போர்க்கால அடிப்படையில் நடைபெறும் நிவாரணப் பணிகள் குறித்தும் விளக்கமாக மத்திய உள்துறை அமைச்சரிடம் எடுத்துரைத்தார்கள். மேலும், தமிழ்நாடு அரசின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து 471  முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 82,000 பொதுமக்களுக்கு உணவு, உடை, மருத்துவ வசதிகள் உட்பட செய்யப்பட்டு வரும் அனைத்து நிவாரணப் பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார்கள்.
கஜா புயலினால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்து விரிவான அறிக்கை உள்துறை அமைச்சகத்துக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்றும் முதல்வர் குறிப்பிடார். கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு தேவையான எல்லா உதவிகளும் செய்ய மத்திய அரசு தயார் என்றும் தமிழகம் கோரும் உதவிகளை வழங்கும்படி மத்திய உள்துறைச் செயலாளருக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழக முதல்வரிடம் தெரிவித்தார்.

Label