OUR CLIENTS
தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை வாரிய செயல்பாட்டை பாராட்டிய ஸ்டாலினுக்கு நன்றி அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை வாரிய செயல்பாட்டை பாராட்டிய ஸ்டாலினுக்கு நன்றி அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி Posted on 17-Nov-2018 தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை வாரிய செயல்பாட்டை பாராட்டிய ஸ்டாலினுக்கு நன்றி அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை, நவ.17-

கஜா புயல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடப்பட்டதால் மீனவர்கள் காப்பாற்றப்பட்டனர், தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை வாரிய செயல்பாட்டை பாராட்டிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், கஜா புயல் குறித்து தமிழக மீனவர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டது. போர்க்கால அடிப்படையில் மீனவர்களுக்கு தகவல் தரப்பட்டது. கஜா புயல் கரையைக் கடக்கும்போது கடுமையாக இருந்தாலும் மீனவர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 333 மீனவக் கிராமங்களில் படகுகளுக்கு கடுமையாக சேதம் ஏற்பட்டுள்ளது.
புயலால் சில நாட்டுப் படகுகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளன. மீனவர்களின் உடைமைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்ய ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீனவக் கிராமங்களுக்கு அதிகாரிகள் சென்று பாதிப்பை ஆய்வுசெய்து அறிக்கை அளிப்பர். ஓகி புயலின்போது ஏற்பட்ட அனுபவத்தை வைத்து, கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை வாரிய செயல்பாட்டை பாராட்டிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி. எதிர்க்கட்சிகளே பாராட்டும் வகையில் புயலுக்கு முன்னும் பின்னும்  தமிழக அரசின் செயல்பாடு அமைந்துள்ளது. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார்  கூறினார். முன்னதாக, கஜா புயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Label