OUR CLIENTS
காந்தி குடும்பத்தில் இல்லாதவரை காங்கிரஸ் தலைவர் ஆக்குவீர்களா பிரதமர் நரேந்திர மோடி சவால்
காந்தி குடும்பத்தில் இல்லாதவரை காங்கிரஸ் தலைவர் ஆக்குவீர்களா பிரதமர் நரேந்திர மோடி சவால் Posted on 17-Nov-2018 காந்தி குடும்பத்தில் இல்லாதவரை காங்கிரஸ் தலைவர் ஆக்குவீர்களா பிரதமர் நரேந்திர மோடி சவால்

அம்பிகாபூர், நவ.17-

காங்கிரஸ் கட்சித் தலைவராக காந்தி குடும்பத்தை சேர்ந்தவர் அல்லாமல் வேறொரு நபரை நியமிக்க முடியுமா என பிரதமர் நரேந்திர மோடி சவால் விடுத்துள்ளார்.
சட்டீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டப் பேரவை தேர்தல் நடைபெறுகிறது, முதல்கட்ட தேர்தல் கடந்த நவம்பர் 12ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் வரும் நவம்பர் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,"காந்தி குடும்பத்தில் இருப்பவர்கள் அல்லாமல், வேறொரு சிறந்த தலைவரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக 5 ஆண்டு காலம் நியமிப்பீர்களா? அப்படி செய்தால், ஜவகர்லால் நேரு ஒரு உண்மையான ஜனநாயக அமைப்பை உருவாக்கினார் என நான் ஒப்புக்கொள்கிறேன்" என்று கூறினார்.
"காங்கிரஸ் கட்சியின் நான்கு தலைமுறையினர் நாட்டை ஆண்டனர். அவர்கள் ஆட்சிபுரிந்தபோது நாட்டுக்காக என்ன செய்தார்கள் என தெரிவிக்க வேண்டும். டில்லி செங்கோட்டையில் நின்றுகொண்டு ஒரு குடும்பத்தை சேர்ந்தவரே பேசி வருகின்றனர். இதனை மக்களும் நன்கு புரிந்துகொண்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார். "ஏழை எளிய மக்களின் சிரமங்களை உங்களால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது. ஆனால், டீ விற்பவரால் நன்கு புரிந்துகொள்ள முடியும்" என்று பிரதமர் நரேந்திர கூறினார்.

Label