OUR CLIENTS
கடலூரில் நிலத்தை அளக்க ரூ.1,000 லஞ்சம்! சர்வேயருக்கு 7 ஆண்டு சிறை
கடலூரில் நிலத்தை அளக்க ரூ.1,000 லஞ்சம்! சர்வேயருக்கு 7 ஆண்டு சிறை Posted on 17-Nov-2018 கடலூரில் நிலத்தை  அளக்க ரூ.1,000 லஞ்சம்! சர்வேயருக்கு 7 ஆண்டு சிறை

கடலூர், நவ.17-

நிலத்தை அளந்து குறிப்பீடு செய்து தர  1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் நில அளவையருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரத்தைச் சேர்ந்தவர் குமரேசன், விவசாயி. இவர், அதே பகுதியில் தனது நிலத்தை அளவீடு செய்ய விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதற்காக, குறுவட்ட நில அளவையர் செல்வராஜ், என்பவர் 1,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.
இதுகுறித்து கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசாரின் அறிவுரைப்படி, விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் குமரேசன், செல்வராஜியிடம், 1,000 ரூபாய் லஞ்சம் வழங்கினார். அப்போது, அங்கு மறைந்திருந்த போலீசார், செல்வராஜை கைது செய்து, கடலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்குத் தொடர்ந்தனர்.
வழக்கு நேற்று முன்தினம், மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, லஞ்சம் வாங்கிய செல்வராஜிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதத் தொகையை கட்டத் தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

Label