OUR CLIENTS
இஸ்ரோவின் புதிய சாதனைக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு!
இஸ்ரோவின் புதிய சாதனைக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு! Posted on 17-Nov-2018 இஸ்ரோவின்  புதிய சாதனைக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு!

தேவகோட்டை, நவ.17-

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விண்வெளித் துறையில் இஸ்ரோவின்  புதிய சாதனைக்கு வண்ண பலுன்கள்  பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) உயர்தொழில்நுட்பத்தில் ஜிசாட்-29 என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் மூலம் ஜிசாட் -29 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தி உள்ளது .அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தி விண்வெளித் துறையில் நமது நாடு புதிய சாதனையை படைத்துள்ளது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் மற்றும்  வடகிழக்கு மாநிலங்களில் தகவல் தொடர்பு மேம்பட உதவும் என்கிற தகவலை மாணவர்களுக்கு  பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் எடுத்து கூறினார்.இந்த சாதனையை செய்த இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகள்,பொறியாளர்கள்,தொழில்நுட்ப ஊழியர்கள் அனைவருக்கும் பள்ளி மாணவர்களால் வண்ண பலூன் பறக்கவிடப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள்,மாணவ,மாணவியர்கள் பங்கேற்றனர்.

Label