OUR CLIENTS
நீதிமன்றம் முன் பயங்கர ஆயுதங்களுடன் 3 பேர் கைது!
நீதிமன்றம் முன் பயங்கர ஆயுதங்களுடன் 3 பேர் கைது! Posted on 17-Nov-2018 நீதிமன்றம் முன் பயங்கர ஆயுதங்களுடன் 3 பேர் கைது!

திருநெல்வேலி, நவ.17-

திருநெல்வேலியில் நீதிமன்றம் முன்பு பயங்கர ஆயுதங்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.  
திருநெல்வேலி தச்சநல்லூர் அருகே உள்ள சத்திரம்புதுக்குளத்தை சேர்ந்தவர் மணி என்ற  மணி. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. மணி மீதான வழக்கு விசாரணை திருநெல்வேலி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததால் அவர் நீதிமன்றம் வந்தார். அதே நேரத்தில் நீதிமன்றம் ஒரு கார் நின்று கொண்டு இருந்தது. 
வெகுநேரம் அந்த கார் நின்று கொண்டு இருந்ததால் கோர்ட் வளாகத்தில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் சந்தேகம் அடைந்து அந்த காரை நோக்கிச் சென்ற போது திடீரென அந்த கார் கிளம்பியது.  இதனால் அந்த கும்பலை போலீசார் விரட்டிச் சென்றனர். அதில் 3 பேரை மடக்கிப் பிடித்தனர். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அந்த கும்பல் வந்த காரை போலீசார் சோதனை செய்தனர். அதில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. 
காரையும், ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்டவர்களை போலீசார் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், நெல்லையை அடுத்த சேந்திமங்கலத்தை சேர்ந்த பெருமாள் மகராஜன் (26), சுரண்டையை சேர்ந்த சிவா என்ற சிவனுபாண்டி (27), மணிகண்டன் (28) என்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சென்ற வாரம் பாளையங்கோட்டை சாந்திநகர் பகுதியில் 2 மினி பஸ்கள் மோதிக் கொண்டன. இதனால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பினர் பஸ் சேதமடைந்ததற்கான பணத்தை கேட்டனர்.  அந்த தரப்பினர் நீதிமன்றம் முன்பு வந்து பேச்சுவார்த்தை நடத்தி பணம் தருவதாக ஒப்புக்கொண்டனர். அந்த தரப்பினர் வருகைக்காக தற்போது பிடிபட்ட கும்பல் காத்து இருந்தது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் அந்த மினி பஸ் ஓட்டுனரை கொலை செய்ய திட்டமிட்டு இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Label