OUR CLIENTS
கஜா புயல் பாதித்த பகுதிகளில் பணிகளை துரிதப்படுத்த 11 அமைச்சர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
கஜா புயல் பாதித்த பகுதிகளில் பணிகளை துரிதப்படுத்த 11 அமைச்சர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு Posted on 19-Nov-2018 கஜா புயல் பாதித்த பகுதிகளில் பணிகளை துரிதப்படுத்த 11 அமைச்சர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை, நவ.19-

புயல் பாதித்த பகுதிகளில் பணிகளை துரிதப்படுத்த நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு 11 அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,  '' 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க 11 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு  உயர் கல்வித் துறை அமைச்சர்  கே.பி அன்பழகன், தொழில் துறை அமைச்சர் எம்.சி சம்பத் மற்றும் ஊரக தொழில் துறை அமைச்சர்  
பா. பென்ஜமின் ஆகியோரும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பார்கள். தஞ்சாவூர் மாவட்டத்திற்குபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோரும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பார்கள். 
திருவாரூர் மாவட்டத்திற்கு  கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் பால் வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சித் துறை அமைச்சர்  கே டி ராஜேந்திர பாலாஜி ஆகியோரும் நிவாராணப் பணிகளை ஒருங்கிணைப்பார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கே. சி. கருப்பணன்,  போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மற்றும் காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சர் ஜி. பாஸ்கரன் ஆகியோரும்  முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பார்கள்'' என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Label