OUR CLIENTS
பேரிடர் காலத்தில் எந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற திட்டமிடல் இல்லை! தமிழக அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
பேரிடர் காலத்தில் எந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற திட்டமிடல் இல்லை! தமிழக அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு Posted on 19-Nov-2018 பேரிடர் காலத்தில் எந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற திட்டமிடல் இல்லை! தமிழக அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை, நவ.19-

பேரிடர் காலத்தில் எந்தெந்த பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்ற திட்டமிடல் அரசிடம் இல்லை என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
வங்க கடலில் உருவான 'கஜா' புயல் நாகப்பட்டினத்துக்கும், வேதாரண்யத்துக்கும் இடையே கரையை கடந்தது. இதனால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியை தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார்.
நேற்று முன்தினம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேரில் கள ஆய்வில் ஈடுபட்டார். இரண்டாம் நாளான நேற்று, புதுக்கோட்டை மாவட்டத்தில்  கஜா புயலால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து,  நிவாரணப்பொருட்களையும் வழங்கினார். கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார் ஸ்டாலின்.
திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: கஜா புயலால் பரிதவிக்கும் மக்களை நேரில் பார்க்க முதலமைச்சருக்கு நேரமும் இல்லை, மனமும் இல்லை. புயலில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு அரசு தற்போது அறிவித்துள்ள நிவாரண நிதியை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் பொதுமக்களுக்கு உணவு, குடிநீர், படுக்கை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் போதுமான அளவில் செய்யப்படவில்லை. பேரிடர் காலத்தில் போர்க்கால அடிப்படையில் எந்தெந்தப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்ற திட்டமிடல் இல்லை. பருவ காற்றும், மழையும் தொடங்குவதற்கு முன்பே சீர் செய்யப்பட்டிருக்க வேண்டிய நீர் நிலைகள் முழுமையாக புறக்கணிக்கப் பட்டுள்ளன. இவ்வாறு, திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Label