OUR CLIENTS
புயலால் சேதமடைந்த புத்தகங்களுக்கு பதில் புதிய பாடப்புத்தகங்கள்! கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
புயலால் சேதமடைந்த புத்தகங்களுக்கு பதில் புதிய பாடப்புத்தகங்கள்! கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி Posted on 19-Nov-2018 புயலால் சேதமடைந்த புத்தகங்களுக்கு பதில் புதிய பாடப்புத்தகங்கள்! கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

ஈரோடு, நவ.19-

கஜா புயலால் சேதமடைந்த பள்ளி பாடப்புத்தகங்கள் பதில் புதிய பாடப்புத்தகங்கள் ஒரு வாரத்தில் உரிய மாணவர்களுக்கு வழங்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் தில்லைநகரில் நடைபெற்ற பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து துறை அதிகாரிகளுடனும் ஆலோசனைக் கூட்டத்திலும் கலந்துரையாடினார் அமைச்சர் செங்கோட்டையன். 
அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கஜா புயல் தாக்குதல் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 136 நடுநிலைப் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளில் மேற்கூரை ஓடுகள் சேதம் அடைந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. சேதமடைந்த இப்பள்ளிகள் விரைவில் சீரமைக்கப்பட்டு, மீண்டும் சிறப்பான முறையில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளி மாணவ, மாணவிகளின் பாடப் புத்தகங்கள் மழையால் சேதமாகியிருந்தால் 1 வாரத்தில் புதிய பாடப் புத்தகங்கள் உரிய மாணவர்களுக்கு வழங்கப்படும். குறைவான மாணவர்கள் பயிலும் அரசு பள்ளிகளை எந்த காரணத்திற்காகவும் மூடும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை. இது குறித்து முதல்வருடன் ஆலோசித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Label