OUR CLIENTS
ரயிலில் பார்சல் முறைகேடு 5 ஊழியர்கள் சஸ்பெண்ட்!
ரயிலில் பார்சல் முறைகேடு 5 ஊழியர்கள் சஸ்பெண்ட்! Posted on 19-Nov-2018 ரயிலில் பார்சல் முறைகேடு  5 ஊழியர்கள் சஸ்பெண்ட்!

சென்னை, நவ.19-

ரயிலில் பார்சல் அனுப்புவதில் முறைகேட்டில் ஈடுபட்ட ஐந்து ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை சென்ட்ரலில் இருந்து தனியார் நிறுவனம் நவ., 8ல் 30 பார்சல்கள் மேற்கு வங்க மாநிலம் ஹவுராவுக்கு அனுப்ப முன்பதிவு செய்து அனுப்பியது. 11 பார்சல்கள்5 தினங்களுக்கு முன் பார்சல் கண்காணிப்பு பிரிவு அதிகாரி இருப்பில் உள்ள பார்சல்கள் குறித்து சோதனை நடத்தினார். அப்போது 11 பார்சல்கள் தனியாக இருந்தது தெரிய வந்தது. இந்த பார்சல்கள் தான் ஹவுராவுக்கு அனுப்பப்பட்டது என அலுவலகத்தில் தகவல் பதிவாகியிருந்தது. அனுப்பப்பட்டதாக பதிவில் உள்ள பார்சல்கள் ஏன் இங்கிருக்கிறது என விசாரணை நடத்தினார். இதனால் அதிகாரிக்கும், ஊழியர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
ஆய்வு செய்த அதிகாரி பார்சல் குளறுபடி குறித்து உயர் அதிகாரிக்கு தெரிவித்தார். உயர் அதிகாரிகள் ஆய்வுக்கு வந்தபோது பார்சல்கள் மாயமாகி இருந்தன. உயர் அதிகாரிகளிடம் சிக்கிவிடுவோம் என பயந்த ஊழியர்கள் பார்சலை மறைத்து விட்டு முறையாக அனுப்பி விட்டோம் என சாதித்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் ஐந்து பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 
இதுகுறித்து உயர் அதிகாரிகள் கூறுகையில் இந்த பிரச்னை குறித்து துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது என்றனர். மதுரையைச் சேர்ந்த ஒருவர் அக்., 26ல் டில்லியில் இருந்து இரண்டு பார்சல்களில் ஐந்து டிவிக்களை மதுரைக்கு அனுப்பினார். இதில் ஒரு பார்சல் வந்து சேர்ந்தது; இரண்டு டிவி உள்ள மற்றொரு பார்சல் இன்னும் கிடைக்க வில்லை. பார்சலை தேடி, அவர் சென்னை வந்தார். டில்லியில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்த பார்சல் எழும்பூருக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுரைக்கு அனுப்பப்பட்டு விட்டது என பார்சல் அலுவலக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்டவருக்கு நேற்று வரை பார்சல் சென்று சேரவில்லை. பார்சல் அலுவலக ஊழியர்கள் முறைகேடு செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Label