OUR CLIENTS
காவல் நிலையத்தில் போதையில் குத்தாட்டம் எஸ்.ஐ., அதிரடியாக இடைக்கால பணி நீக்கம்!
காவல் நிலையத்தில் போதையில் குத்தாட்டம் எஸ்.ஐ., அதிரடியாக இடைக்கால பணி நீக்கம்! Posted on 19-Nov-2018 காவல் நிலையத்தில் போதையில் குத்தாட்டம் எஸ்.ஐ., அதிரடியாக இடைக்கால பணி நீக்கம்!

கோலார் தங்க வயல், நவ.19-

பேத்தமங்கலம் காவல் நிலைய  சப்&இன்ஸ்பெக்டர் குடி போதையில் காவல் நிலையத்திலேயே நடனமாடியதோடு அங்கிருந்த விசாரணை கைதியையும் ஆடச்சொல்லி மிரட்டும் காட்சி சமூக ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து அவர் இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோலார் தங்க வயல் போலீஸ் மாவட்டடத்தைச் சேர்ந்த பேத்தமங்கலம் காவல் நிலையத்தில் சப்&இன்ஸ்பெக்டராக  பணியாற்றி வந்தவர் ஒன்னே கவுடா . இவர் பனியன் மற்றும் இரவு கால்சட்டை மட்டும் அணிந்தபடி , கப்பர்சிங் என்ற தெலுங்கு படத்தின் பாடல் ஒலிக்க ஒரு கையில் மொபைல் போனும் இன்னொரு கையில் கைத்தடியும் வைத்தபடி அந்த படத்தில் வரும் காட்சி போலவே நடனமாடியபடி அங்கிருக்கும் ஒரு விசாரணை கைதியையும் நடனமாடச் சொல்லி மிரட்டும் காணொளி கடந்த 17ம் தேதி சனியன்று சமூக உடகங்களில் பரவியது.
இந்த தகவல் அறிந்த கோலார் தங்க வயல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் லோகேஷ் குமார் விசாரணை நடத்தி  உதவி ஆய்வாளர் ஒன்னே கவுடாவை இடைக்கால பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவவம் காவல் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Label