OUR CLIENTS
சிறையில் கைதிகளுக்கு போதைப் பொருள்கள் விநியோகம்: தலைமைக் காவலர் இடைநீக்கம்!
சிறையில் கைதிகளுக்கு போதைப் பொருள்கள் விநியோகம்: தலைமைக் காவலர் இடைநீக்கம்! Posted on 19-Nov-2018 சிறையில் கைதிகளுக்கு போதைப் பொருள்கள்  விநியோகம்: தலைமைக் காவலர் இடைநீக்கம்!

வேலூர், நவ.19-

வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு போதைப் பொருள்கள், செல்லிடப்பேசி விநியோகித்ததாக முதன்மை தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை சிறைக் கண்காணிப்பாளர் ஆண்டாள் பிறப்பித்தார்.
வேலூர் மத்திய சிறையில் 750-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைக்குள் தடைசெய்யப்பட்ட பொருள்களான செல்லிடப்பேசி, கஞ்சா போன்றவை கைதிகளுக்கு தடையின்றி கிடைத்து வருவதாக புகார்கள் எழுந்தன. அதன்படி, கடந்த 2 மாதங்களாக சிறைக் காவலர்கள் நடத்திய பல்வேறு கட்ட சோதனைகளில் இதுவரை 11 செல்லிடப்
பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து சிறைக்குள் கைதிகளுக்கு தடைசெய்யப்பட்ட பொருள்கள் வழங்கி உதவும் சிறைக் காவலர்கள் குறித்து ரகசிய விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், குண்டர் தடுப்புக் காவலில் சிறையில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கைதி ஒருவருக்கு முதன்மை தலைமைக் காவலர் செல்வின் தேவதாஸ் (40), ரூ. 5 ஆயிரம் பணம் பெற்றுக் கொண்டு கஞ்சா, செல்லிடப்பேசி ஆகியவற்றை கொடுத்து உதவியது தெரியவந்தது. இதையடுத்து செல்வின்தேவதாஸ் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை சிறைக் கண்காணிப்பாளர் ஆண்டாள் பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து சிறை காவலர்கள் கூறியதாவது: சென்னையில் கைதிகளுக்கு கஞ்சா, செல்லிடப்பேசி ஆகியவற்றைக் கொடுத்து உதவியதாக வந்த புகார்களை அடுத்து செல்வின் தேவதாஸ், கடந்த 9 மாதங்களுக்கு முன் வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். பின்னர் அவர் தற்காலிகமாக போளூர் கிளைக்கு மாற்றப்பட்டு, மீண்டும் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். எனினும், தொடர்ந்து அவர் சிறைக் கைதிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு  செல்லிடப்பேசி, போதைப் பொருள்கள் கொடுத்து உதவியுள்ளார். அதேசமயம், அவரது வங்கிக் கணக்கில் கணக்கில் வராத வகையில் சில மாதங்களாக பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இந்தப் பணத்தை கைதிகளின் உறவினர்கள் அவரது வங்கிக் செலுத்தியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து செல்வின்தேவதாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

Label