OUR CLIENTS
உடைசலான பஸ்களில் உட்கார முடியவில்லை வேதனையில் பயணம் செய்யும் பயணிகள்!
உடைசலான பஸ்களில் உட்கார முடியவில்லை வேதனையில் பயணம் செய்யும் பயணிகள்! Posted on 20-Nov-2018 உடைசலான பஸ்களில் உட்கார முடியவில்லை வேதனையில் பயணம் செய்யும்  பயணிகள்!

ராமநாதபுரம், நவ.20-

உடைசலான பேருந்துகளில் உட்கார முடியவில்லையாம், வேதனையில் பயணம் செய்யும் பயணிகள் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
முதுகுளத்தூர் பஸ் டெப்போவில் ஓட்டை, உடைசலான பேருந்துகளை பெரும்பான்மையாக இயக்குவதாலும், போதிய பராமரிப்பின்றி ஆங்காங்கே திடீரென பழுதாகி நிற்பதால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் மாணவர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின், கும்பகோணம் பிரிவு, காரைக்குடி மண்டல, முதுகுளத்தூர் கிளையின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. முதுகுளத்தூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர் போன்ற நகரங்களுக்கும், ராமேஸ்வரம், திருச்செந்தூர், வேளாங்கண்ணி, நாகூர் போன்ற ஆன்மீக நகரங்களுக்கும், முதுகுளத்தூர், கடலாடி தாலுகா பகுதிகளுக்கு நகர பேருந்துகளும் இயக்கப்படுகிறது. 
இங்கு இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் இரண்டாம் நிலை பேருந்துகளாக உள்ளது. இதனால் உடைந்த இருக்கைகள், கால்களை பதம்பார்க்கும் படிக்கட்டுகள், மழைக்கு ஒழுகும், ஓட்டை உடைச்சலான பேருந்துகளாக உள்ளது. இரவு நேரங்களில் சென்னை, கோவை, திருப்பூர் போன்ற நெடுந்தொலைவு இயக்கப்படும் பேருந்துகளில் டீசல் சேமிப்பிற்காக, ஆக்ஸிலேட்டர் பெடல்களில் போல்ட் நட்டுகள் கொண்டு வெல்டிங்க் செய்யப்பட்டு உள்ளதால் சுமார் 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பேருந்துகள் செல்லாததால் பயணிகள் எரிச்சலடைந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தெளிவாக எரியாத முகப்பு விளக்குகளால் தற்போது பனிக்காலம் என்பதால் ஓட்டுனர்களுக்கு தெளிவாக தெரியாமல் தடுமாறி ஓட்டி செல்லும் நிலை உள்ளது. உடன் நிற்காத பிரேக்குகளால் விபத்து ஏற்படும் அச்சம் நிலவுகிறது.
முதுகுளத்தூர் மற்றும் கடலாடி பகுதியில் இயக்கப்படும் நகர பேருந்துகள் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக இயக்கப்பட்ட, பழைய பேருந்துகள் என்பதால் கிராம பகுதிகளுக்கு செல்லும் போது ஏதாவது காரணத்தால் திடீரென பழுதாகி நின்று விடுகிறது. 
இதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாக புகார் கூறுகின்றனர். கிராமங்களில் ஒருவழிப்பாதை என்பதால் பேருந்து பழுதாகி நிற்பதால், அன்றைய நாள் மற்ற வாகனங்கள் வழியாக செல்ல முடியாமல் பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து செல்லும் நிலை உள்ளது. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாது. எனவே முதுகுளத்தூர் கிளையில் தரமானதாக, பயணிகளின் உயிருக்கு உத்தரவாதமான பேருந்துகளை இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் நகரில் ஏராளமான தனியார் மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. நகரில் அனைத்து பகுதிகளிலும் காலை, மாலையில் கூட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் மினி பஸ்களை முறையாக பராமரிக்காமல் உள்ளதால், ரோட்டில் செல்லும் போது அதிக அளவில் புகையை கக்கி செல்கிறது. இதனால் பின்னால் செல்லும் வாகன ஓட்டிகள் புகை சுவாசத்தில் மயக்கமடைகின்றனர். மேலும் பள்ளி சீருடை அணிந்து செல்லும் குழந்தைகளின் ஆடைகள் புகையால் அழுக்காகின்றன. இதுபோன்ற பழுதான பஸ்களை ஆய்வு நடத்தி வட்டார போக்குவரத்து அதிகாரிகள், போக்குவரத்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.
இதுபற்றி சென்டர் பிளாக் பகுதி சந்தானம் கூறுகையில், மினி பஸ் புதிதாக விடும் போது நன்றாக இருந்தது. நீண்ட வருடங்கள் ஆகிய நிலையில், கடந்த சில மாதங்களாக சில பஸ்களில் புகை அதிகமாக வருகிறது. போக்குவரத்து போலீசாரும் வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் உள்ளனர். நடவடிக்கை எடுப்பதில்லை. பஸ் நிலையத்தில் கிளம்பும் போது அதிகளவில் புகை வருவதால், காத்திருக்கும் பயணிகள், பள்ளி மாணவிகள் சீருடையில் புகை படிகிறது என்றார்.

Label