OUR CLIENTS
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் பார்வையிடாததால் பொதுமக்கள் போராடும் சூழல் திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் பார்வையிடாததால் பொதுமக்கள் போராடும் சூழல் திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு Posted on 20-Nov-2018 புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் பார்வையிடாததால் பொதுமக்கள் போராடும் சூழல் திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

புதுக்கோட்டை, நவ.20-

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை அரசு உயர் அலுவலர்கள் முறையாக பார்வையிடாததால் தான் மக்கள் ஆங்காங்கே போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் திருவப்பூர், அழகம்பாள்புரம், பெரியார் நகர், பூங்கா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் பார்வையிட்டார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியது: புயல் பாதிப்பால் இறந்த வர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
மத்திய அரசு பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து முதல்கட்டமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குறிப்பிட்ட தொகையை சிறப்பு நிதியாக உடனே வழங்க வேண்டும். தமிழக அரசின் புயல் முன்னெச் சரிக்கை நடவடிக்கை வரவேற்கத் தக்கதாக இருந்தது. ஆனால், சீரமைப்புப் பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வரும், மத்திய அமைச்சர்களும் பார்வையிட வேண்டும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக்கிடவும், நிவாரணம் போன்ற பணிகளை மேற்கொள்ளவும் மத்திய, மாநில அரசுகள் சிறப்புக் குழுக்களை அமைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளை அரசு அலுவலர்கள் பார்வையிடாததால் தான் மக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், போராடுவது நியாயமானதுதான். அதேசமயம், அதில் வன்முறை இருக்கக்கூடாது என்றார்.

Label