OUR CLIENTS
கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் மீட்பு, நிவாரண பணிகளில் தாமதம் ஏன்? வருவாய் நிர்வாக கமிஷனர் விளக்கம்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் மீட்பு, நிவாரண பணிகளில் தாமதம் ஏன்? வருவாய் நிர்வாக கமிஷனர் விளக்கம் Posted on 20-Nov-2018 கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் மீட்பு, நிவாரண பணிகளில் தாமதம் ஏன்? வருவாய் நிர்வாக கமிஷனர் விளக்கம்

சென்னை, நவ.20-

'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் மீட்பு, நிவாரண பணிகளில் தாமதம் ஏன்? என்பது குறித்து வருவாய் நிர்வாக கமிஷனர் விளக்கம் அளித்துள்ளார்.
வருவாய் நிர்வாக கமிஷனர் சத்யகோபால் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைத்து அதிகாரிகளும் முழு அர்ப்பணிப்போடு ஈடுபட்டு வருகின்றனர். 1 லட்சத்து 70 ஆயிரத்து 454 மரங்கள் விழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள் கிராமங்களுக்கு செல்வதற்கு கால தாமதம் ஏற்படுவது உண்மை தான். ஆனாலும் அரசு முடிந்த வரையிலும் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி, உள்ளே செல்வதற்கு தாமதம் ஏற்படுகிறது.
இதுதவிர மக்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. மக்கள் ஒத்துழைப்பு கொடுப்பதை பொறுத்து மீட்பு பணிகள் வேகமாக நடக்கும். எல்லா பகுதிகளிலும் மரம் விழுந்திருக்கிறது. அதனை அப்புறப்படுத்திவிட்டு, உள்ளே செல்லவேண்டும் என்பதால் தான் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தாமதம் அடைகிறது. அனைத்து அதிகாரிகளும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். 493 நிவாரண முகாம்களில் 2 லட்சத்து 49 ஆயிரத்து 83 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
புயல்-மழையால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடம் இல்லாதவர்கள் முகாம்களில் வந்து தங்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகிறோம். மக்களின் தேவைக்கு ஏற்ப நிவாரண முகாம்கள் செயல்படும். புயலால் பாதிக்கப்பட்டு சேதமாகிய மரங்கள் குறித்து வருவாய்த்துறை, வேளாண்மை துறை மூலமாக கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் கட்டாயமாக கணக்கெடுக்கப்படும். யாரையும் விடுவிக்கப்போவதில்லை. பாதிப்புகளை துல்லியமாக கணக்கிட்டு, அரசு விதிகளுக்கு உட்பட்டு நிவாரணம் கொடுக் கப்படும். பாதிப்புகள் குறித்து சலுகைகளை அரசு 2-ம் கட்டமாக அறிவிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் விவசாயிகள் யாரும் அச்சப்படவேண்டியது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Label