OUR CLIENTS
குப்பையில்லா நகரம் மக்களிடம் ஆலோசனை கோரும் மாநகராட்சி!
குப்பையில்லா நகரம் மக்களிடம் ஆலோசனை கோரும் மாநகராட்சி! Posted on 20-Nov-2018 குப்பையில்லா நகரம் மக்களிடம் ஆலோசனை கோரும் மாநகராட்சி!

திருச்சி, நவ.20-

திருச்சி மாநகராட்சியை குப்பையில்லா நகரமாக அனுமதிக்க பொதுமக்கள் தங்களது ஆலோசனை மற்றும் ஆட்சேபணைகளை தெரிவிக்கலாம் என ஆணையர் ந. ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, அவர் கூறியது: தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், திருச்சி மாநகராட்சியை குப்பையில்லா நகரமாக அறிவிப்பு வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
இதன்படி, மாநகராட்சியில் அமைந்துள்ள பள்ளிகள், மத்திய மாநில அரசு அலுவலகங்கள், வங்கிகள், சுய உதவிக் குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நகர் நல சங்கங்கள், அடுக்குமாடி குடியிருப்பு நல சங்கங்கள், தன்னார்வ தொண்டு அலுவலகங்கள், சங்கங்கள், உணவகங்கள், ரயில் நிலையம், பேருந்துநிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் 50 பணியாளர்களுக்கு மேல் பணிபுரியும் நிறுவனங்களிடம் குப்பையில்லா நகரமாக்க உறுதிமொழி கடிதம் பெறப்பட்டுள்ளது.
இதனையேற்று திருச்சி மாநகராட்சி தனி அலுவலரால் திருச்சி மாநகரை குப்பையில்லா நகரம் என அறிவிக்க நவ.13ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபணைகளை வரும் 15 நாள்களுக்குள் தெரிவிக்கலாம். மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கலாம் என்றார்.

Label