OUR CLIENTS
நிலத்தடி நீர்மட்டம் உயராததால் பேராபத்து ஆற்றங்கரையோர விவசாயம் கேள்விக்குறி!
நிலத்தடி நீர்மட்டம் உயராததால் பேராபத்து ஆற்றங்கரையோர விவசாயம் கேள்விக்குறி! Posted on 20-Nov-2018 நிலத்தடி நீர்மட்டம் உயராததால் பேராபத்து ஆற்றங்கரையோர விவசாயம் கேள்விக்குறி!

கடலூர், நவ.20-

கடலூர் மாவட்டத்தில் ஓடும் பெண்ணையாறு, கெடிலம் ஆறுகளில் இதுவரை தண்ணீர் திறந்து விடாத காரணத்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை. இதனால் கரையோர கிராமங்களில் விவசாயம் கேள்விக் குறியாகி வருகிறது.
தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை மிக தாமதமாக அக்டோபர் கடைசியில் ததொடங்கியது. ஆண்டின் சராசரி மழையளவு 1206 மி.மீ., இதில் கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை சராசரி அளவை விட கூடுதலாக 1449 மி.மீ., மழை பெய்துள்ளது. நடப்பு ஆண்டு அக்டோபரில் இயல்பாக பெய்ய வேண்டிய 220.2 மி.மீட்டருக்கு 218 மி.மீ., பெய்துள்ளது.நவம்பர் மாதத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழையளவான 295.3 மி.மீட்டரில் கடந்த வாரம் வரை 239.69 மி.மீ., மட்டுமே மழை பெய்துள்ளது.மொத்தத்தில் சராசரி மழையளவை விட 27 சதவீதம் குறைவாக அளவே மழை பெய்துள்ளது.
அதேப்போல கர்நாடகா மாநிலத்தில் நல்ல மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. பெங்களூரூ பகுதியில் சரியான மழை இல்லாத காரணத்தால் பெண்ணையாற்றிற்கு தண்ணீர் வரத்து இல்லாமல் போனது.இதன் காரணமாக சாத்தனூர் அணையில் 119 அடி கொள்ளளவில் வெறும் 91 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. அதாவது 7 ஆயிரத்து 431 மில்லியன் கன அடிக்கு வெறும் 2900 மில்லியன் கன அடிமட்டுமே தண்ணீர் உள்ளது.ஆண்டுதோறும் பெண்ணையாற்றில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் பொழுது கரையோரகிராமங்களில் நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டு குழாய்கிணறுகள் சிறப்பாக இயங்கும்.
இந்த ஆண்டு தண்ணீர் திறக்காததாலும், நல்ல மழை பெய்யாததாலும் பெண்ணையாறு, கெடிலம் ஆறுகள் காய்ந்து வருகின்றன.இதனால் கரையோர கிராமங்களின் கிணற்றில் நீர்மட்டம் உயரவில்லை. கோடையில் கீழே போன நீர்மட்டம் இன்னும் உயரவில்லை. இதனால் இந்த ஆண்டு போர்வெல்லில் பம்ப் செட்டுகள் இயங்குமா என்பது சந்தேகமாக உள்ளதாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில் வங்கக்கடலில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் மூலம் இன்று முதல் மழை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு கிடைத்தால் தான் கடலூர் மாவட்ட விவசாயிகள் செழிப்பான விவசாயத்தை செய்ய முடியும்.

Label