OUR CLIENTS
உசிலம்பட்டியில் 7 தலைமுறைகள் ஒன்றிணைந்த உறவுகளின் விழா!
உசிலம்பட்டியில் 7 தலைமுறைகள் ஒன்றிணைந்த உறவுகளின் விழா! Posted on 20-Nov-2018 உசிலம்பட்டியில் 7 தலைமுறைகள்  ஒன்றிணைந்த உறவுகளின் விழா!

உசிலம்பட்டி, நவ.20-

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் ஏழு தலைமுறைகளின் வாரிசுகளை ஒன்றிணைத்த வினோத விழா நடைபெற்றது. 
வத்தலக்குண்டுவில் வசிப்பவர் டாக்டர் முருகேசபாண்டியன். இவர் உசிலம்பட்டியில் வசிக்கும் தனது தாத்தா, அவரது உடன் பிறந்தோர்களின் வாரிசுகள், வாரிசுகளின் பிள்ளைகள், பிள்ளைகளின் உறவுகள் என 7 தலைமுறைகளை ஒன்றிணைத்துள்ளார். இந்த உறவுகளை கடந்த 3 மாதங்களாக போன், வாட்சாப் மூலம் அவர்கள் எங்கெங்கு இருக்கிறார்கள் எனக் கண்டுபிடித்தார். அதன் பின்பு அனைவரும் உசிலம்பட்டியிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஒன்று சேர முடிவெடுத்தனர். 
இந்த விழா நேற்றுமுன்தினம் நடைபெற்றது, அதில் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும், பெங்களூர், சென்னை, கோவை, திருப்பூர், வத்தலக்குண்டு, உசிலம்பட்டி என பல ஊர்களிலிருந்து 350க்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர்.  இது இல்ல விழாவாக இல்லாமல் திருவிழாவாக மாறி அனைவரும் தங்களது உறவுகளை பகிர்ந்து கொண்டு அளவில்லா மகிழ்ச்சியில் திகைத்தனர். கடைசி தலைமுறை 9 மாதக்குழந்தை வரை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது இன்னும் சிறப்பு. இது போன்ற உறவுகளை ஒன்றிணைத்த விழா இதுவரை இப்பகுதியில் நடந்ததில்லை.
ஒருவருக்கொருவர் முகம் கூட பார்க்காத உறவுகள் சிலர் வெளிநாடுகளிலிருந்து வர முடியாமல் காணொளியில் திரையில் வந்து உறவுகளிடம் உங்களை சந்திக்க முடியவில்லையே என வருத்தம் தெரிவித்து சந்தோஷப்பட்டனர்.  இவர்களின் சந்தோஷம் மாலையில் கண்ணீராக மாறியது. அனைவரும் பிரியவேண்டிய நேரம் நெருங்கியதும், பெண்கள் கண்ணீர் வடித்து உறவுகளை பிரிய மனமில்லாமல்  பிரிந்து சென்றனர். ஆனாலும் கவலைப்படாதீர்கள் நாம் அனைவரும் அடுத்தாண்டோ அல்லது அடுத்து வரும் சில ஆண்டிலோ மீண்டும் சந்திப்போம் என இந்த விழுதுகளின் உறவுகளிடம் முருகேசபாண்டியன் தெரிவித்தார்.

Label