OUR CLIENTS
காங்கிரஸ் தொடக்கமும் முடிவும் ஒரே குடும்பத்துடன் முடிந்துவிட்டது பிரதமர் மோடிக்கு அஸ்லம்பாஷா பதில்!
காங்கிரஸ் தொடக்கமும் முடிவும் ஒரே குடும்பத்துடன் முடிந்துவிட்டது பிரதமர் மோடிக்கு அஸ்லம்பாஷா பதில்! Posted on 20-Nov-2018 காங்கிரஸ் தொடக்கமும்  முடிவும் ஒரே குடும்பத்துடன் முடிந்துவிட்டது  பிரதமர் மோடிக்கு அஸ்லம்பாஷா பதில்!

வாணியம்பாடி, நவ, 20-
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சி சிறுபான்மைபிரிவு மாநில தலைவர் அஸ்லம் பாஷா அறிக்கை ஒன்று வெளியிட்டார்.
அதில் கூறி இருப்பது : இந்தியா என் தாய் நாடு, நாங்கள் ஒரே குடும்பம் , ஒரே வீடு, ஒரே தலைவர், தேசம் பற்றி தேச மக்கள் பற்றி அக்கரை இல்லாமல் நாடு நாடாக ஓடி கார்ப்பரேட்களின் பாதங்கள் தாங்கியாக இருக்கும் பிரதமர் மோடி பேச்சு வேடிக்கையானது தான்.
ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் நாட்டின் வறுமையை ஒழித்து பசுமைப் புரட்சி ஏற்படுத்தியது காங்கிரஸ். தொழில் புரட்சி மூலம் நாடுமுழுதும் தொழிற்பேட்டைகள் அமைத்து வேலைவாய்ப்பை பெருக்கி உற்பத்தியை அதிகப்படுத்தியது காங்கிரஸ். வங்கிகளை தேசிய மயமாக்கி சிறு குறு தொழில்களுக்கு கடன் உதவி செய்து உற்பத்தியை பெறுக்கி தனிநபர் வருமானத்தை அதிகப்படுத்தியது காங்கிரஸ். இருபது அம்ச திட்டத்தின் மூலம் உழுபவனுக்கே நிலங்களை சொந்தமாக்கி வறுமையை ஒழித்து ஜமீன்தாரர் முறையை ஒழித்தது காங்கிரஸ். 100 ஆண்டுகளுக்கு மேலாக நேரு குடும்பம் இந்திய மக்களின் ஊணோடும் உதிரத்தோடும் கலந்த உறவு. பிரிவினைக்கும் பயங்கரவாதத்துக்கும் தங்கள் குடும்பத்தையே பலி கொடுத்து இனியும் இந்த தேசத்திற்காக ரத்தம் சிந்த தயாராக இருக்கும் எங்கள் குடும்பத்தை பார்த்து கோட்டு, சூட்டு போட்ட  பிரதமர் மோடி வேடிக்கை செய்வது அவரது வாடிக்கை. ஏழைத்தாயின் மகன் எனக்கூறிக்கொண்டு 10 லட்சத்துக்கு கோட்டு, சூட்,  பூட் மாட்டிக்கொண்டு  பேசுவதெல்லாம் பொய், கைநீட்டுவதெல்லாம் கமிஷன்,  கையெழுத்து போடுவதெல்லாம் கரப்சன் ஆன மோடி அரசு.  
காங்கிரசை பார்த்து குடும்ப ஆட்சி என்றும், குடும்ப கட்சி என்றும் கூறுகிறார். 10 ஆண்டுகள் மன்மோகன் சிங் என்ற பொருளாதார மேதையை பிரதமராக்கி அழகு பார்த்ததது காங்கிரஸ், நரசிம்ம ராவை பிரதமராக்கியதும் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியில் யார் பிரதமராக வேண்டும் என்பதை காங்கிரஸ் கட்சி தான் முடிவு செய்யுமே தவிர மோடியல்ல. அடுத்த வீட்டுச் சன்னலை எட்டிப்பபார்க்கும் அநகரீக கலாச்சாரத்தை விட்டு விட்டு உங்கள் கட்சி பணியை செய்யுங்கள். அடுத்த கட்சியின் உள்கட்சி விவகாத்தில் தலையிடுவது அநாகரிகம் என்பதை உணருங்கள். கலசத்தில் ஒட்டிய குப்பைகள் அடுத்த காற்றில் கீழே விழும் என்பது அறிவாளிக்குதான் தெரியும், மோடி போன்ற முட்டாளுக்கு தெரியாது என்பது மக்களுக்கு தெரியும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

Label