OUR CLIENTS
மகளிர் சுயஉதவி குழு போர்வையில் கந்துவட்டி கும்பல் மெல்ல ஊடுருவல்!
மகளிர் சுயஉதவி குழு போர்வையில் கந்துவட்டி கும்பல் மெல்ல ஊடுருவல்! Posted on 20-Nov-2018 மகளிர் சுயஉதவி குழு போர்வையில் கந்துவட்டி கும்பல் மெல்ல ஊடுருவல்!

திருநெல்வேலி, நவ.20-

கந்துவட்டி கொடுமை தாங்காமல் சில பெண்கள் மாயமாகும் சம்பவமும், தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் தமிழகத்தில் வெகுவாக அரங்கேறி கொண்டு வருகிறது. 
குறிப்பாக வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்கள் தங்களின் அவசர தேவைக்காக தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கி பிரச்சனையில் சிக்கி தவிப்பதை தவிர்க்கவே மகளிர் சுயஉதவி குழுக்களை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. இதன் மூலம் பெண்கள் தேசிய வங்கிகள் மூலம் குறைந்த வட்டிக்கு 20 நபர்கள் 10நபர்கள் கொண்ட குழுவாக கடன் வாங்கி அவர்கள் சொந்தமாக சிறுதொழில் தொடங்கி அதன் மூலம் கிடைக்கும் சிறு வருவாயை கொண்டு அந்த குடும்பங்களின் பொருளாதார தேவையை நிறைவு செய்யும் விதத்தில் மகளிர் சுயஉதவி குழுக்கள் உருவாக்கப்பட்டது. இது மத்திய மாநில அரசின் திட்டமாகும். 
ஆனால் தற்போது தேசிய வங்கி மேலாளரை மயக்கி சில பெண்கள் 20ஆயிரம் வாங்கி கொடுத்தால் 2 ஆயிரம் எடுத்துக்கொள்கிறார்கள். இது கந்து வட்டிகாரர்களை விட மிகமிக கொடுரமான செயலாகும். இதை வங்கி மேலாளர்கள் கருத்தில் கொண்டு அப்பாவி பெண்களிடம் பணம் வசூலிக்கும் குழு தலைவி என்ற போர்வையில் உலா வரும் நபர்களிடம் பணம் கொடுக்காமல் கடன் பெறும் நபரிடம் கமிஷன் இல்லாமல் வங்கி மேலாளர்கள் வழங்கினால் நன்றாக இருக்கும். இது போதாது என்று தமிழகத்தில் மகளிர் சுயஉதவி குழு என்ற போர்வையில் கந்து வட்டிகாரர்கள்ஜீன் கூடாரமாக மாறி வருகிறது. குறிப்பாக அப்பாவி பெண்களை குறி வைத்து நடந்து வரும் அவல நிலையின் ஒரு பகுதியாக தமிழகத்தில் மைக்ரோனான்ஸ், கிராமவிடியல், கிராம உதயம், எச்.டி.எப்.சி, ஜனலெட்சுமி, எக்யூட்டாஸ், ஆசிர்வாதம், கே.ஜி.எப். பைனான்ஸ், மகாசேமம் போன்ற பல்வேறு நிறுவனங்கள் பெண்களின் வறுமையும், அறியாமையையும் பயன்படுத்தி கொண்டு கிராமங்களில் புகுந்து பெண்களை அணுகி குறைந்த வட்டிக்கு மகளிர் சுயஉதவி குழுக்களுக்களை போல் நாங்களும் குறைந்த வட்டிக்கு பணம் தருகிறோம் நீங்கள் எங்கள் நிறுவனத்தில் குழுக்களாக சேர்ந்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என ஆசை வார்த்தை கூறி கடன் வழங்கி தவணை முறையில் கட்ட சொல்லி தமிழகத்தில் கால் பதித்து விட்டார்கள் இந்த கந்து வட்டி கும்பல்கள்.  தவணை கட்ட முடியாதவர்கள் ஊரை விட்டு ஒடியதும் மானம் தாங்காமல் தற்கொலை செய்துள்ளனர். பலர் குறிப்பாக கிராம விடியல் என்ற நிறுவனம் காலை 5மணிக்கே (சரியான நேரத்தில் நிமிடம் தவறாமல் கிராமம் விடியும் முன் இருளில்) பொது இடங்களில் ஓர் இடத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி கொண்டு அதன் ஒளியில் கடனை வசூலிப்பது வழக்கம் அடுத்ததாக கிராம உதயம் என்பது சூரியன் உதயமாகும் பொழுது வசூலிப்பது வழக்கம். இதில் ஏதாவது கஷ்டப்பட்ட பெண் காலையில் பணம் கட்ட முடியவில்லை என்றால் மீதி உள்ள பெண்கள் தலா ரூ10 போட்டு கட்டவேண்டும் இதனால் குழு தலைவி காது கொடுத்து கேட்க முடியாத வார்த்தைகளால் அந்த பணத்தை வசூலிக்க வரும் ஆண் நபர் முன்பாகவே கொடுரமாக திட்டி வசூலிப்பது வழக்கம். 
இத்தகைய கொடுமைகள் தமிழகத்தில் பல கிராங்களில் அரங்கேறி வருகிறது. குறிப்பாக கடந்த 2010ம் ஆண்டில் டிசம்பர் மாதம் மைக்ரோபைனான்ஸ் மூலம் பணம் பெற்றவர்கள் பணம் திருப்பி கட்டமுடியாமல் ஒரே நேரத்தில் 20பேர் தற்கொலை செய்து கொண்டார்கள். பெண்களின் நிலைமை இப்படி இருக்க மேற்கண்ட நிறுவனங்களில் கடன் பெற்ற சில பெண்களிடம் கேட்ட போது ஆண்களுக்கு சரியான வேலைவாய்ப்பு இல்லாததாலும், தமிழகத்தில் பெரும்பாலான ஆண்கள் மது குடிப்பழக்கத்திற்கு ஆளாகி சீரழிவதால் நாங்கள் பெற்ற குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பில் இருப்பதால் இந்த கந்து வட்டி கும்பலிடம் சிக்கி தவிக்கும் சுழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம் அது போக கல்வி கட்டணம் உயர்வாலும், விளைவாசி விண்ணுக்கு தொட்ட நிலையில் உள்ளதால் எங்கள் நிலை மாற மது விலக்கு அமலபடுத்தப்பட வேண்டுமென கூறினார்கள்.
மேற்படி நிறுவனங்கள் பலகோடி ரூபாய் சொத்துக்கள் சேர்த்துள்ளனர். மக்களின் பரிதாப நிலையை ஆராய்ந்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் சட்டபடி நடவடிக்கை எடுத்து இந்த கந்து வட்டி கும்பலின் பிடியில் இருந்து மக்களை விடுவிக்க தமிழக அரசின் கவனத்துக்கு எடுத்து செல்ல வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

Label