OUR CLIENTS
வருசநாடு வனப்பகுதியில் கஞ்சா சாகுபடியா?
வருசநாடு வனப்பகுதியில் கஞ்சா சாகுபடியா? Posted on 20-Nov-2018 வருசநாடு வனப்பகுதியில் கஞ்சா சாகுபடியா?

தேனி, நவ.20-

தேனி போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் கே.முத்துக்குமார், சார்பு ஆய்வாளர் எம்.சதீஷ் மற்றும் காவலர்கள் வருசநாடு மலைப் பகுதிகளில் கஞ்சா பயிரிடப் பட்டுள்ளதா என சோதனை நடத்தினர்.
இதில் தேனி நக்சல் தடுப்புப் பிரிவினர், வேட்டைத் தடுப்புப் பிரிவினர், வனத்துறையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். மலைக் கிராமங்களான அரசரடி, கடுக்காகுளம், பாலாத்திஓடை, பால்கேனி பகுதிகளில் சோதனை நடந்தது. மேலும், வருசநாடு வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து சோதனை நடைபெறும் என தெரிவித்தனர். தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் மேகமலை வன உயிரினக் காப்பாளர் கலாநிதி ஆலோசனையின் பேரிலும் இந்தச் சோதனை நடந்தது.

Label