OUR CLIENTS
கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் கடும் சேதம் அடைந்துள்ளது: முதல்வர் பழனிசாமி நேரடி ஆய்வு
கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் கடும் சேதம் அடைந்துள்ளது: முதல்வர் பழனிசாமி நேரடி ஆய்வு Posted on 20-Nov-2018 கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் கடும் சேதம் அடைந்துள்ளது: முதல்வர் பழனிசாமி நேரடி ஆய்வு

புதுக்கோட்டை:-

கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் 8 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரிதும் பாதிப்புக்குள்ளான புதுக்கோட்டை மாவட்டம் மாப்பிளையார் குளத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட்டு நிவாரண உதவிகளை இன்று வழங்கினர். 
தமிழகத்தைத் தாக்கிய கஜா புயலானது டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கடுமையான சேதத்தினை உண்டாகியுள்ளது. உயிர் சேதங்களை விடவும் கடுமையான பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது.  குடிசை வீடுகள், மின் கம்பங்கள் முற்றிலுமாக சாய்ந்துவிட்டன.
லட்சக்கணக்கான தென்னை, வாழை மரங்கள் முற்றிலும் கீழே சாய்ந்து அழிந்து விட்டன அதற்கான நிவாரணப் பணிகளும் பல்வேறு கட்டங்களில் தொடர்ந்து நடந்து வருகின்றன.
கஜா புயல் நிவாரண பணிகளுக்காக உடனடியாக ரூ.1000 கோடி விடுவித்து, முதல்வர் பழனிசாமி நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
கஜா புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு ஏற்கனவே ரூ.10 லட்சம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையாக காயமடைந்தவர்களுக்கு ரூ..1 லட்சமும், சிறிய அளவில் காயமடைந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும்.
முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ. 10 ஆயிரம் நிவாரணம். பகுதியளவு சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ. 4100 நிவாரணம். முழுமையாக குடிசைகளை இழந்தவர்களில் தகுதி வாய்ந்தோருக்கு புதிய வீடு கட்ட உதவி.
தென்னை விவசாயிகளுக்கான உதவிகளில் 175 மரங்களைக் கொண்ட ஒரு ஹெக்டேர் தென்னை வயல் சேதமடைந்தவர்களுக்கு, ஹெக்டேருக்கு ரூ.1,92,500 நிவாரணம். மறு சாகுபடி பணிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.72100 நிவாரணம்.
சொட்டுநீர் பாசனம் செய்வோருக்கு 100 சதவீதம் முழுமையாக மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 20 சதவீதம் மானியமும் வழங்கப்படவுள்ளது.
நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு கூடுதலாக ஒரு வேஷ்டி, ஒரு சேலை மற்றும் 4 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட உள்ளது.
மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.5000 வழங்கப்பட்ட உள்ளது.
புயலால் உயிரிழந்த கால்நடைகளுக்கும் தனித்தனியாக மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Label