OUR CLIENTS
சபரிமலை விவகாரத்தில் பிரச்சினையை கேரள அரசு கையாளும் விதம் ஏமாற்றமளிக்கிறது என பாஜக தலைவர் அமித் ஷா இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சபரிமலை விவகாரத்தில் பிரச்சினையை கேரள அரசு கையாளும் விதம் ஏமாற்றமளிக்கிறது என பாஜக தலைவர் அமித் ஷா இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Posted on 20-Nov-2018 சபரிமலை விவகாரத்தில் பிரச்சினையை கேரள அரசு கையாளும் விதம் ஏமாற்றமளிக்கிறது என பாஜக தலைவர் அமித் ஷா இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புது டில்லி:-

   சபரிமலை விவகாரத்தில் பிரச்சினையை கேரள அரசு கையாளும் விதம் ஏமாற்றமளிக்கிறது என பாஜக தலைவர் அமித் ஷா இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது. தீர்ப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இதற்கு, ஐயப்ப பக்தர்கள், ஹிந்து அமைப்புகள், பெண்கள் அமைப்புகள், பா.ஜக, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் சபரிமலை விவகாரத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் பாஜக தலைவர் அமித்ஷா, தனது டுவிட்டர் பக்கத்தில் பினராயி விஜயன் குறித்து கடும் கண்டனம் தெரிவித்தார்.
இது குறித்து அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் சபரிமலை விவகாரத்தில் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு நடத்தி வரும் விதம் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.
சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான உணவு, குடிநீர், இருப்பிடம் மற்றும் கழிவறை கூட இல்லாத நிலை இருக்கிறது.
இள வயதுப் பெண்கள் மற்றும் முதியவர்களை கேரள போலீசார் மரியாதை குறைவாக நடத்துகின்றனர். ஐயப்ப பக்தர்களை பினராயி விஜயன், கைதிகளைப் போல நடத்த முடியாது. அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றார் அமித் ஷா.
சபரிமலையில், குப்பைத் தொட்டிக்கு அருகே பக்தர்கள் உறங்கும் நிலைக்கு தள்ளப்படுவதாக செய்திகள் வருவதாகவும், பக்தர்களை இதுபோன்று நடத்தக் கூடாது என்பதை பினராயி விஜயன் உணரவேண்டும் என்றும் அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில்  குறிப்பிட்டுள்ளார்.

Label