OUR CLIENTS
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி சுற்று வட்டாரங்களில் மழை பெய்து வருவதால் மின் சீரமைப்பு மற்றும் மரங்கள் அகற்றும் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி சுற்று வட்டாரங்களில் மழை பெய்து வருவதால் மின் சீரமைப்பு மற்றும் மரங்கள் அகற்றும் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. Posted on 20-Nov-2018 திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி சுற்று வட்டாரங்களில் மழை பெய்து வருவதால் மின் சீரமைப்பு மற்றும் மரங்கள் அகற்றும் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

திருவாரூர்:-

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி சுற்று வட்டாரங்களில் மழை பெய்து வருவதால் மின் சீரமைப்பு மற்றும் மரங்கள் அகற்றும் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கஜா புயல் பாதிப்புகளால் முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி மாவட்டத்தின் சுற்றுவட்டாரங்களில் 5-வது நாளாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. 
 புயலால் சாய்ந்J கிடக்கும் மின் கம்பங்களை வெளி மாவட்ட மின்சார ஊழியர்கள் உள்ளிட்டோர் சீரமைக்கும் பணி, மரங்களை அகற்றும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இன்று காலை முதல் கடலூர், திருவாரூர் மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  5 நாட்களாக மின்விநியோகம் இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வரும் நிலையில் தற்போது மழையில் சீரமைப்பு பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மழை காரணமாக நிவாரண முகாம்களுக்கு பொருட்களை கொண்டு செல்வதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஒருசில கடைகள் மட்டுமே திறந்துள்ளதல் அத்தியாவாசியப் பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கடலூர், திருவாரூர் உட்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை எச்சரிக்கை காரணமாக  நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Label