OUR CLIENTS
முதல்வரிடம் பொதுமக்கள் பேச அதிமுகவினர் அனுமதிக்கவில்லை - ராமதாஸ் சாடல்
முதல்வரிடம் பொதுமக்கள் பேச அதிமுகவினர் அனுமதிக்கவில்லை - ராமதாஸ் சாடல் Posted on 20-Nov-2018 முதல்வரிடம் பொதுமக்கள் பேச அதிமுகவினர் அனுமதிக்கவில்லை - ராமதாஸ் சாடல்

சென்னை:-

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அணுகுமுறையை பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். 
இப்படிப்பட்ட முதல்வரைப் பெற மக்கள் என்ன தவம் செய்திருக்க வேண்டும் என ராமதாஸ் சாடியுள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதற்காக அவர் இன்று காலை 5.45 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அங்கிருந்து வாகனம் மூலம் முதலாவதாக புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார்.
கஜா புயல் கள ஆய்வுக்கு புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டத்திற்கு இன்று காலை சென்ற முதல்வர் பழனிசாமி மக்களை ஒதுக்கி வைத்துவிட்டு ஆதரவாளர்கள் மட்டும் புடைசூழ வலம் வந்தார். திருவாரூர் பகுதிக்கு சென்றபோது, மழை வந்துவிட்டது. அதனால்  அந்தப் பகுதியில் சுற்றுப் பயணத்தையும் ஒத்தி வைத்துவிட்டு முதல்வர் பழனிசாமி திருச்சிக்கு திரும்பிவிட்டார்.
இந்த நிலையில் இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில்
”கஜா புயலால் பாதிக்கப்பட்டப்பகுதிகளை 100 மணி நேரம் கழித்து முதல்வர் பழனிசாமி பார்வையிடுகிறார்.
கேரள முதல்வரைப் போன்று நிவாரணப் பணிகள் குறித்து எதிர்க்கட்சிகளுடன் எடப்பாடி பேசினாரா? ஆலோசனைகளைப் பெற்றாரா?
பினராயி விஜயன் அரசு வெள்ள நிவாரணப் பணிகளை செய்தது போல தமிழகத்தில் கஜா புயல் நிவாரணப் பணிகளை எடப்பாடி அரசு செய்ததா?
மக்களை ஒதுக்கி வைத்துவிட்டு ஆதரவாளர்கள் மட்டும் புடைசூழ வலம்வருகிறார். பாதிக்கப்பட்ட மக்கள் மீது என்னவொரு அக்கறை? இப்படிப்பட்ட முதல்வரைப் பெற மக்கள் என்ன தவம் செய்திருக்க வேண்டும்?”
இவ்வாறு, பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Label