OUR CLIENTS
பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஊழலை ஒழிக்க தந்த கசப்பு மருந்து! பிரதமர் நரேந்திர மோடி விளக்கம்
பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஊழலை ஒழிக்க தந்த கசப்பு மருந்து! பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் Posted on 21-Nov-2018 பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஊழலை ஒழிக்க தந்த கசப்பு மருந்து! பிரதமர் நரேந்திர மோடி விளக்கம்

ஜாபுவா, நவ.21-

மத்திய பிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் நேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டில் புரையோடி போன ஊழல் என்ற நோயை குணப்படுத்துவதற்கு அளிக்கப்பட்ட கசப்பான மருந்து என தெரிவித்தார்.
மத்தியபிரதேசத்தில் நவம்பர் 28ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. அதை முன்னிட்டு அங்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. நேற்று மத்தியபிரதேசத்தின் ஜபுவா நகரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். 
வீட்டில் உள்ள கரையான்களை அழிக்க நாம் விஷ மருந்தை பயன்படுத்துகிறோம். அதேப்போல் ஊழல் என்ற நோயை குணப்படுத்த உயர் ரூபாய் நோட்டுகளின் மதிப்பிழப்பு நடவடிக்கையை நான் பயன்படுத்தினேன். தங்கள் வீடு, அலுவலகம், தொழிற்சாலைகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்தவர்கள் எல்லாம் நேற்று வருமான வரியை கட்டுகிறார்கள். அந்த பணத்தை கொண்டு ஏழை எளியவர்களுக்கான நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
காங்கிரஸ் அறிவித்த கடன் தள்ளுபடியை கேட்டு மத்தியபிரதேச விவசாயிகள் ஏமாற கூடாது. அது காங்கிரஸ் கட்சியின் மோசடியாகும்.
கர்நாடகாவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என காங்கிரஸ் அறிவித்தது. ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. மாறாக விவசாயிகளை சிறையில் அடைக்க முயற்சி செய்து வருகிறது.
கடந்த 2008ம் ஆண்டு பொது தேர்தலுக்கு முன் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக காங்கிரஸ் அறிவித்தது. ஆனால் அது காங்கிரஸின் வெறும் கண் துடைப்பு வேலையாக மாறிவிட்டது. காங்கிரஸ் விவசாயிகளுக்கு எதிரான கட்சி. விவசாயிகளின் நலனை பற்றி பேசும் காங்கிரஸ் அவர்களுக்கான 15 நீர்பாசன வசதி திட்டங்களை பல ஆண்டுகளாக எந்த காரணமும் இன்றி நிறைவேற்றாமல் இருந்தது.
இந்திய கம்ப்டிரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (சிஷீனீஜீ௴க்ஷீஷீறீறீமீக்ஷீ ணீஸீபீ கி௵பீவீ௴ஷீக்ஷீ நிமீஸீமீக்ஷீணீறீ ஷீயீ மிஸீபீவீணீ) அளித்த அறிக்கையில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் செய்த விவசாய கடன் தள்ளுபடியில் முறைகேடு நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனது அரசாங்கம் வரும் 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் ஆண்டு வருவாயை இரட்டிப்பாக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசின்  பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் மூலமாக இதுவரை 14 கோடி மக்களுக்கு எந்த உத்தரவாதமும் இன்றி கடன் வழங்கியுள்ளது. எனது அரசு 4 ஆண்டுகளில் செய்த சாதனையை முறியடிக்க காங்கிரஸ் அரசுக்கு 10 ஆண்டுகள் ஆகும்.
முன்பு மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்த போது இங்கு மக்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை நினைவு கூர்ந்து பாருங்கள். மாநில வளர்ச்சியில் அக்கறை இல்லாத காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்ய தகுதியற்றது. காங்கிரஸின் 55 ஆண்டுகால ஆட்சியில் மத்தியபிரதேசத்தில் 1,500 பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான அரசு 15 ஆண்டுகளில் 4000 பள்ளிகளை திறந்துள்ளது.
ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு சமமான கல்வி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, விவசாயிகளுக்கு நீர்பாசன வசதி, முதியோர்களுக்கு மருந்துவ உதவி ஆகியவை எங்கள் அரசின் தாரக மந்திரம் நான் நாட்டின் 125 கோடி மக்களுக்காக உழைக்கிறேன். அவர்களுக்காகவே வாழ்கிறேன். இது காங்கிரஸுக்கு பிடிக்கவில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Label